28 நவம்பர், 2008

மும்பை பயங்கரவாதம் – தமிழக மழை, வெள்ளம் - பலி – சில கேள்விகள்

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் பலரையும் பலவிதத்தில் பாதித்துள்ளது. இந்த சம்பவத்தில் தொலைக்காட்சி ஊடகங்களின் அத்துமீறல் குறித்து பரந்த அளவில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப்பொறுப்பில் இல்லாத அரசியல்வாதிகள், பொடாவை போன்ற கடுமையான சட்டங்களை மீண்டும் கொண்டுவந்தால்தான் இதுபோன்ற பயங்கரவாதங்களை தடுக்க முடியும் என்று அறுதியிட்டு கூறுகின்றனர்.
தாக்குதல் சம்பவங்களை சினிமா காட்சிகள்போல தொலைக்காட்சி ஊடகங்கள் காட்டி மலினப்படுத்துவதாக எழுதும் அச்சு ஊடகங்கள் அனைத்தும், சினிமா ஸ்டில்களுக்கு சற்றும் குறைவில்லாத புகைப்படங்களை பிரசுரிக்கின்றன.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த எத்தரப்பும் சாராத பொதுமக்கள், அரசுப்படை வீரர்கள், தீவிர/பயங்கரவாதிகள் அனைவருக்கும் கண்ணீர் அஞ்சலிகளை செலுத்திவிட்டு வேறு சில விவ(கா)ரங்களை பார்ப்போம்.

*****

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இயங்கும் முக்கியத்துறைகளில் ஒன்று தேசிய குற்ற ஆவண மையம் (National Crime Record Bureau). தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பின் ISO 9001 : 2000 சான்றிதழ் பெற்ற அமைப்பு.

இந்த அமைப்பு ஆண்டுதோறும் நாட்டில் நடக்கும் குற்றங்களை ஆவணமாக பதிவு செய்து வெளியிடுகிறது. இதில் நாட்டில் நடக்கும் தற்கொலைகளும் அடக்கம்.

இந்த புள்ளி விவரங்களின்படி கடந்த 2007ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,22,637.

மகாராஷ்டிராவில் 15,184(12.4%)பேரும், ஆந்திராவில் 14,882(12.1%) பேரும், மேற்கு வங்கத்தில் 14,860 (12.1%) பேரும், தமிழ்நாட்டில் 13,811 (11.3%) பேரும், கர்நாடகத்தில் 12,304 (10%) பேரும் தற்கொலை செய்துள்ளனர். இந்த 5 மாநிலங்களில் மட்டும் 57.9 சதவீத தற்கொலைகள் நடந்துள்ள நிலையில், மீதமுள்ள 23 மாநிலங்களிலும் 42.1 சதவீதம் பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
வறுமை, நோய், குடும்ப பிரசினை போன்ற காரணங்களுக்காகவே அதிகமான தற்கொலைகள் நடந்துள்ளதாக தெரிகிறது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் 41.9 சதவீதம் பேர் விவசாயம், சிறு வியாபாரம் போன்ற சுயதொழில் செய்தவர்கள். குடும்பத்தலைவிகள் 19.7%-ம், பணியிலிருப்பவர்கள் 11.9%-ம், வேலை வாய்ப்பற்றோர் 6.9%-ம், மாணவர்கள் 5.1%-ம், மற்றவர்கள் 14.5%-ம் தற்கொலை செய்துள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டவர்களில் சுமார் 90 சதவீதம் பேர் பள்ளியிறுதிக்கு மேல் படிக்காதவர்கள்.

தற்கொலை செய்து கொண்டவர்களில் சுமார் 65 சதவீதம் பேர் விஷம் அருந்தியோ, தூக்கில் தொங்கியோ தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட ஒரு லட்சத்து, 22 ஆயிரத்து, 637 பேரில் ஓரிருவர் நமக்கு தெரிந்தவர்களாக இருக்கக்கூடும்.
ஆனால் அவர்களின் இந்த அகால மரணத்திற்கான காரணம் ஏதோ ஒரு வகையில் சமூக பயங்கரவாதமாக இருப்பதை நாம் உணருவதில்லை.


தற்கொலைக்கு தூண்டுவதை குற்றமாக இந்திய தண்டனைச் சட்டம் நிர்ணயம் செய்கிறது. ஆனால் இந்த லட்சக்கணக்கான தற்கொலைகளை தூண்டியதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை.

வறுமையோ, வேலையின்மையோ, நோய்க்கு சிகிச்சை பெற முடியாத நிலையோ பயங்கரவாதமாக நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் இவை தனிநபர் சார்ந்த விஷயங்களாக நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளாக ஜாதகங்களும். ஜோசியங்களும், தன்னம்பிக்கை புத்தகங்களும் நம்மிடம் திணிக்கப்படுகிறது.

இந்த பிரசினைகள் குறித்து விவாதங்களை தொடங்கிய பொருளியல் அறிஞர் அமார்த்ய சென்னுக்கு நோபல் பரிசு கொடுத்து அவரை கருத்தரங்குகளில் மட்டுமே பங்கு பெறும் காட்சிப் பொருளாக்கிவிட்டோம். அவரது கொள்கைகள் எந்த பொருளாதார பள்ளியிலும், தொழில் மேலாண்மை பள்ளியிலும் பாடநூலாக இல்லாமல் செய்து விட்டோம்.

எனவே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் நமது கவனத்துக்கு வராமலே போய்விடுகிறது.

******

மேற்கூறியவாறு தற்கொலை செய்து கொள்வதற்கும்கூட ஒரு துணிவு தேவைப்படுகிறது. அந்த துணிவு இல்லாத சிலர்கூட மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டிருக்கக்கூடும்.
அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குக்கூட பொருளீட்ட முடியாத இளைஞர்கள்தான், மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களின் ஆயுதங்களாக மாறிப்போகின்றனர்.

இந்த பகடைக்காய்கள்தான் சமூகத்தாலும் வஞ்சிக்கப்பட்டு, மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களாலும் வஞ்சிக்கப்படுகின்றனர்.
*****

தமிழகத்தில் பெய்துவரும் மழையில்கூட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் இது நமது கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஏனெனில் இந்த மரணங்களை ஊடகங்கள் பரபரப்பான செய்திகளாக தருவதில்லை (எதிர்க்கட்சி ஊடகங்களைத் தவிர).

இத்தகைய வெள்ளம் தமிழ்நாட்டிற்கு புதிதல்ல, சுனாமியைப்போன்று. ஆனாலும் இந்த வெள்ளம் வரும்போதெல்லாம் பல உயிர்கள் பறிபோகின்றனவே!

இது ஏன் நமக்கு தீவிரவாத தாக்குதல் அளவுக்கு பாதிப்பதில்லை? ஏரி, குளங்களை ஆக்கிரமித்து பேருந்து நிலையங்களும், ரயில் பாதைகளும் அமைக்கும்போது அரசுக்கும் பொறுப்பு இருப்பதில்லை. அதைப்பார்க்கும் கல்வியாளர்களுக்கோ, ஊடகங்களுக்கோ, பொதுமக்களுக்கோ அது அழிவுக்கு வகுக்கும் வழியாக தெரிவதுமில்லை. அந்த இடங்களில் வெள்ளம் தாக்கும்போதுகூட மழையின்மீதுதான் நமக்கு கோபம் வருகிறது. நீர்நிலைகளை பாதுகாக்க தவறியவர்கள்மீது கோபம் வருவதில்லை. ஏனென்றால் இதற்கும் கோபம் வரவேண்டும் என்று யாரும் நமக்கு உணர்த்தவில்லை.

நான்கு நாள் மழைக்குக்கூட தாங்காத சாலையை, ரயில் பாதையை அமைக்கும் அரசு அமைப்புகள் மீது நமக்கு கோபம் வருவதில்லை. ஏனெனில் அவை அனைத்தும் நமது வரிப்பணத்தில்தான் அமைக்கப்படுகிறது என்ற உண்மை நம்மில் பலருக்கும் உறைப்பதில்லை.

ஆனால் தீவிரவாத தாக்குதல் குறித்த செய்திகள் வெளியாகும்போது மட்டும் நமது தேசபக்தி பொங்குகிறது. பொடா சட்டத்தை ஆதரிப்பது முதல், மனசாட்சியுள்ள ஒரு சர்வாதிகாரி(!) ஆட்சிக்கு வந்தால்தான் நாடு உருப்படும் என்ற அளவிற்கு பேச ஆரம்பிக்கிறோம். இதற்கான பயிற்சியைத்தான் நமது சமூகமும், கல்விமுறையும், ஊடகங்களும் நமக்கு அளித்துள்ளன.

வறுமை, வேலையின்மை, நோயை உருவாக்கும் சூழல், நோயை தீர்க்கமுடியாத நிலைமை, இவை அனைத்திற்கும் வழிவகுக்கும் ஊழல் ஆகியவை, எப்போது நமக்கு தீவிரவாதமாக/ பயங்கவாதமாக/ வன்முறையாக தெரியும்?

ஊழலில் ஈடுபடுவதன்மூலமாக லட்சக்கணக்கான மக்களை தற்கொலைசெய்துகொள்ள தூண்டுபவர்களுக்கும், மற்ற வகை அகால மரணங்களைஏற்படுத்துபவர்களுக்கும் எந்த பொடா சட்டத்தின் மூலம், யார் தண்டனைவழங்குவது?

13 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

no need to comment with my name as ur writeup doesn't deserve it. Understand the background of this attack and why true Indians(Not u ) gets agitated. Its time to forget all difference and rise above occasion. But we cannot expect those human feelings from u. Keep scribbling with your stupid thoughts. (For your info i am security advisor to various governments).What u talk about is social evil which is totally different from state sponsored terror activities. u need to discuss on those i am ready and we can discuss here.

பெயரில்லா சொன்னது…

ஆங்கிலத்தில் எழுதியுள்ள அனானிக்கு.

தமிழ் அனானியின் பணிவான பதில்.

உங்கள் தேச பக்தி பாராட்டுக்குரியது.

ஆனால் இந்த பதிவை எழுதியவரை இந்தியர் இல்லை என்று சொல்வதற்கோ, அவரது தேசபக்தியை கேள்விக்குட்படுத்துவதற்கோ தங்களுக்கு உரிமையில்லை என்று தோன்றுகிறது.

சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க உங்களைப்போன்ற ராணுவ பாதுகாப்பு ஆலோசகர்கள் என்ன தீர்வு சொல்லி இருக்கிறீர்கள்?

சாமானிய மக்களைப்பற்றி கவலைப்படாமல் தாஜ், ஓபராய் போன்ற ஐந்து நட்சத்திர விடுதிகளில் தங்கும் வாய்ப்பு பெற்றவர்களின் பாதுகாப்பு குறித்து கவலைப்படும் உங்களுக்கு, தமிழக மழையில் கூரைகூட இல்லாமல் இறந்து போனவர்களின் சோகம் உள்ளத்தை தொடாததில் ஆச்சரியம் இல்லை. ஏனெனில் உங்களைப் பொறுத்தவரை இவர்கள் இந்தியர்கள் இல்லை, இந்த கட்டுரையாளரைப்போல.

பெயரில்லா சொன்னது…

மனதில் குமுறிக் கொண்டிருந்ததை நீங்கள் எழுத்தில் வடித்துள்ளீர்கள். நேற்றைய தினமணி முதல் பக்க விமர்சனத்தை கண்டு ஆறுதல் பெற்றேன். தங்கள் எழுத்துக்களில் மிகுந்த நியாயம் இருப்பதாக ஏற்கிறேன். தேசபக்தி கதைகளை யார் சொன்னாலும் அதை கவனிக்க வேண்டாம். சொல்பவர்களை விட இதயத்தில் இயல்பாய் தாங்கி இருப்பவர்கள் இங்கு ஏராளம்.

பெயரில்லா சொன்னது…

Dear Anani,

Please understand that i never said i am not moved by the death of people due to flood. It is really sad but to compare natural calamity and artificial terror is what i said is wrong. You have to understand no one has the power to fight against nature even though we have pre-warning systems in place. But what happened im mumbai is not only taj and oberoi as u are pointing out it is also normal common people like u and me in CST. So my view is that dont compare terrorism and natural calamity in same plate. They are different types one man made and other natural. Hope u understand. My sympathy goes for all who lost their life in flood rain but i cannot digest when someone sitting in someplace decides when and how we should die.

முரளிகண்ணன் சொன்னது…

அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்

அகராதி சொன்னது…

//வறுமையோ, வேலையின்மையோ, நோய்க்கு சிகிச்சை பெற முடியாத நிலையோ பயங்கரவாதமாக நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் இவை தனிநபர் சார்ந்த விஷயங்களாக நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளாக ஜாதகங்களும். ஜோசியங்களும், தன்னம்பிக்கை புத்தகங்களும் நம்மிடம் திணிக்கப்படுகிறது.//

மிகச்சரியான வரிகள். ஆழ்ந்து யோசிக்கவேண்டிய வரிகள்.

தொடர்ந்து சிந்தியுங்கள். அதை துணிவுடன் எழுதுங்கள்.

பெயரில்லா சொன்னது…

முன்னாள் செய்தியாளர் நண்பருக்கு,

இந்நாள் செய்தியாளனின் வணக்கம்.

உங்கள் கருத்துகள் ஏற்கத்தகுந்தவையே.

உங்கள் முந்தைய பதிவையும் படித்ததில் நீங்கள் ஏன் இந்த துறையைவிட்டு விலகினீர்கள் என்பது புரிந்தது.

கார்ப்பரேட் மயமாகிவிட்ட ஊடகத்துறையினிடையே மாற்று ஊடகத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது.

முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள்.

பெயர் எழுதி அடையாளம் காட்ட முடியாத இழிநிலையில் உள்ள

-ஒரு செய்தியாளன்-

சுந்தரவடிவேல் சொன்னது…

நல்ல பதிவு.

Unknown சொன்னது…

ஊழலில் ஈடுபடுவதன்மூலமாக லட்சக்கணக்கான மக்களை தற்கொலைசெய்துகொள்ள தூண்டுபவர்களுக்கும், மற்ற வகை அகால மரணங்களைஏற்படுத்துபவர்களுக்கும் எந்த பொடா சட்டத்தின் மூலம், யார் தண்டனைவழங்குவது?

Ask yourself as to who defends/defended Lallus,Veerasamis and
V.Ramasamys in the name of caste and social
justice.Your blog makkal sattam is full
of lies and false information.You spread
wrong information in the name of public interest.
who should punish you and how.

Unknown சொன்னது…

வறுமையோ, வேலையின்மையோ, நோய்க்கு சிகிச்சை பெற முடியாத நிலையோ பயங்கரவாதமாக நமக்கு தெரிவதில்லை. ஏனெனில் இவை தனிநபர் சார்ந்த விஷயங்களாக நமக்கு போதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தீர்வுகளாக ஜாதகங்களும். ஜோசியங்களும், தன்னம்பிக்கை புத்தகங்களும் நம்மிடம் திணிக்கப்படுகிறது.


இந்த பிரசினைகள் குறித்து விவாதங்களை தொடங்கிய “பொருளியல் அறிஞர் அமார்த்ய சென்”னுக்கு நோபல் பரிசு கொடுத்து அவரை கருத்தரங்குகளில் மட்டுமே பங்கு பெறும் காட்சிப் பொருளாக்கிவிட்டோம். அவரது கொள்கைகள் எந்த பொருளாதார பள்ளியிலும், தொழில் மேலாண்மை பள்ளியிலும் பாடநூலாக இல்லாமல் செய்து விட்டோம்.


Sen is read by many but his ideas have to be implemented by the state.who prevents more allocation for primary education.why is that you social justicewallahs
always tout only caste based reservation.how is that the OBCs who earn crores are also considered as backward classes by you.
In any case debates on poverty etc were there
even before Sen became an economist.Name dropping like ths is a sign of intellectual immaturity.You need not prove it again and again.

Unknown சொன்னது…

அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குக்கூட பொருளீட்ட முடியாத இளைஞர்கள்தான், மதம்-இனம்-மொழி-அரசியல் ரீதியான அடிப்படைவாத கொள்கையாளர்களின் ஆயுதங்களாக மாறிப்போகின்றனர்.

Not necessarily so.The fellow who tried to bomb airport in UK was an educated muslim.Many of the persons associated with 9/11 attack were neither
unemployed nor illiterate.The terrorists who attacked in Mumbai are not illiterate.By writing like this you want to deny the reality - the presence of islamic
terrorism on global scale.

பெயரில்லா சொன்னது…

hallo

i simply don't understand why you are confusing one issue with the other. what happened in bombay was war, plain and simple. to confuse that with larger social issues like healthcare, malnutrition and unemployment is ludicrous.

you're obsessed with the number of people who died, whereas this event was not about how many died but how the enemy could strike at will.

what kind of a nation state are we? what is the foundation of our so called superpower status if a a few jihadis can hold the country to ransom for 72 hours? why are our seas so vulnerable? these questions are separate from the social issues you have raised, but integral to our very survival as a nation.

and you have very conveniently left out the part where two guys walked into the main railway station and sprayed bullets on ordinary people; the victims of this attack were not just the richie rich who go to taj and oberoi - who you clearly despise - but ordinary people too.

and pray, why whould we discriminate against the rich? don't they have right to have their lives protected? if the govt doesn't care about the guy on the street, is that the rich man's fault?

to try and justify such acts of islamic terrorism is hypocrisy. the perpetratots are not like naxal elements who can justify taking up arms against an unjust society.

and it is naive to think that this problem will go away if everyone is provided with food, clothing and shelter. as someone else pointed out, a lot of so-called educated people are now involved in islamic terrorism.

jihadi militancy needs more and more such events to sustain itself. kashmir, babri masjid, gujarat are all just used as excuses to recruit more militants. isi needs to keep these outfits alive to keep needling india, because the foundation of that failed state pakistan is hatred for india.

when so many issues are involved in what is a global menace, it is highly immature on your part to trivialize it br bringing up unconnected points of debate.

சுந்தரராஜன் சொன்னது…

பாரதி தமிழன், முரளி கண்ணன், அகராதி, சுந்தரவடிவேல், பெயரில்லாதவர்கள், i criticise periyar என்ற முகமூடிக்குள் ஒளிந்திருக்கும் நண்பர், ramesh ஆகியோருக்கு நன்றி.

விமர்சனங்களுக்கு பதில் விரைவில் வரும்.

கருத்துரையிடுக