29 மார்ச், 2009

தினமலர் வாரமலரின் தமிழ்ப்பற்று!

தினமலர் நாளிதழுக்கும் தமிழ் மொழிக்கும் இடையே உள்ள உறவு மிகவும் விந்தையானது. தமிழ்நாட்டில், தமிழர்களின் ஆதரவால் வாழ்க்கை நடத்தும் தினமலர் நாளிதழ், தமிழர்களுக்கு எந்த அளவிற்கு நேர்மையாக இருக்கிறது என்பது பெரும் விவாதத்திற்குரியது.

தினமலர், தமிழ் மொழிக்காவது நேர்மையாக இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சும். உதாரணமாக கமா எனப்படும் காற்புள்ளியை எங்கே, எதற்காக, எப்படி பயன்படு்த்த வேண்டும் என்பதுகூட தினமலருக்கு தெரியாது.

ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரும்போது அவற்றுக்கு இடையே காற்புள்ளி போடுவது இயல்பு. ஆனால் தினமலரோ, அரசியல் தலைவர்களின் பெயரையோ, கட்சிகளின் பெயரையோ சுருக்கமாக முதலெழுத்துகளில் குறிப்பிடும்போது இந்த காற்புள்ளிகளை தேவையின்றி பயன்படுத்தும். இந்த பெயர்ச்சொற்கள் தொடர்ச்சியாக வரவேண்டும் என்றில்லை: தனியாக பிரசுரிக்கும்போதே காற்புள்ளிகளை தவறாக பயன்படுத்தும். [உதாரணம்: மு.க., - ஜெ., - தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க,] இவை தொடர்ச்சியாக வரும்போது காற்புள்ளி கட்டாயமாக போடவேண்டும். தனித்தனியாக பிரசுரிக்கும்போது காற்புள்ளி போடுவது இலக்கணப்படி தவறு. ஆனால் இந்த தவறை தொடர்ந்து செய்துவருகிறது. தினமலர்.

இந்த தினமலரின் 29-03-2009 தேதிய வாரமலர் (சென்னை, மதுரை, கோவை, பாண்டி) இதழ்களில் இது உங்கள் இடம் என்ற பெயரில் வெளியாகும் வாசகர் கடிதம் பகுதியில் ஆயிரம் ரூபாய் பரிசு பெற்ற கடிதம் ஒன்று வெளியாகி உள்ளது.

அந்த கடிதத்தை படிக்காதவர்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வில் இடம் பெற்ற திரைப்பட பாடல்

ஆங்கில வழி கல்வி கற்பிக்கப்படும் தனியார் பள்ளி ஒன்றில் தமிழாசிரியராக பணியாற்றுகிறேன். நான் நடத்திய மாதிரி தேர்வில், “தமிழ் எத்தனை வகைப்படும்” என்ற வினாவுக்கு மாணவி ஒருத்தி, “முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என மூவகைப்படும்...” என விடையளித்தாள்.

பிற வினாக்களுக்கு தப்பும், தவறுமாக விடையளித்திருந்த அம்மாணவி, இந்த வினாவுக்கு மட்டும் எப்படி சரியாக விடையளித்தாள் என வியந்த நான், அவளிடம் இது பற்றி விசாரித்தேன்.


அவளோ, தான் நடிகர் விஜயின் ரசிகை என்றும், விஜய் படத்தின் பாடல்கள் அனைத்தும் தனக்கு மனப்பாடமாகத் தெரியும் என்று கூறியதோடு, விஜய் நடித்த திரைப்பட பாடலான, “நீ முத்தமொன்று தந்தால் முத்தமிழ், வெட்கப்பட்டு சிரித்தால் செந்தமிழ்... நீ பேசிடும் வார்த்தைகள் பைந்தமிழ்...” என்ற பாடலைக் கொண்டு தமிழின் வகைகளை எழுதியதாகவும் கூறினாள்.

படிக்கும் பிள்ளைகள் திரைப்பட பாடல்களை மனப்பாடம் செய்து, “உரு” போடும் நேரத்தை, தமிழ்ப்பாடச் செய்யுள்களை உருப்போடுவதில் செலவிட்டால் அதிக மதிப்பெண்களை பெறலாமே!

- அ. லக்குமதி, தென்காசி


தமிழின் வகைகள் என்பது இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என்று மூன்று பிரிவாக முன்னர் பிரிக்கப்பட்டிருந்தது. தற்போது காலத்தின் மாற்றத்தில் அறிவியல் தமிழ், சட்டத்தமிழ் போன்ற நவீன பிரிவுகளும் உருவாகி இருப்பது தமிழர்களுக்கு தெரியும். ஆனால் விஜய் படத்தின் பாடலில் இருப்பது போல் முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ் என்ற அடிப்படையில் தமிழை, திரைப்பட பாடலாசிரியர்கள் உட்பட, தமிழ் அறிஞர்கள் யாரும் பிரிக்கவில்லை.

இது மாணவ-மாணவிகளுக்கு தெரியாமல் இருந்தால், அது மாணவப்பருவம் என்பதால் மன்னி்க்கக்கூடிய குற்றமே.

ஆனால் ஒரு ஆசிரியைக்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.

இந்த உண்மை தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிப்பது எனறு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கடிதத்திற்கு 1,000 ரூபாய் பரிசு வேறு.

தமிழர்களின் வாழ்நிலை, அரசியல் குறி்த்து, உள்நோக்கத்தோடு தப்பும்-தவறுமாகவும், திரித்தும் செய்திகளை வெளியிடும் தினமலர், இப்போது தமிழோடும் விளையாடுகிறது. தமிழ்ச் சமூகம் என்ன செய்யப்போகிறது?

21 கருத்துகள்:

Technologies Unlimited சொன்னது…

Enna Kodumai Sir Idhu?

//முத்தமிழ், செந்தமிழ், பைந்தமிழ்

தமிழ் நேசன் சொன்னது…

மரியாதையா தினமலர் தமிழ் பத்திரிக்கை தமிழ் பதிப்பை நிறுத்திடலாம். அந்தளவுக்கு தமிழுக்கும் தமிழர்களுக்கும் அவங்க சேவை செஞ்சுகிட்டு இருக்காங்க.

ஜோசப் பால்ராஜ் சொன்னது…

தமிழுக்கு தினமலர் செய்யும் தொண்டு அளப்பரியது. இவங்களோட சேவையப் பாராட்டி நான் ஏற்கனவே எனது பதிவில் சென்ற ஆண்டு ஒரு இடுகையிட்டிருந்தேன். http://www.maraneri.com/2008/07/blog-post_14.html

உண்மைத் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டிய பத்திரிக்கை இது.

Sanjai Gandhi சொன்னது…

த்தூ.. வேற என்ன சொல்ல? :(

இந்தக் கன்றாவியைத் தான் நான் தினமும் காசு குடுத்து வாங்குகிறேன். வேறு வழி இல்லாமல்.

தினமும் ஏகப் பட்ட எழுத்துப் பிழைகள் தான். :(

ரவி சொன்னது…

இதனை காசு கொடுத்து வாங்குவதை முதலில் நிறுத்துங்கள்.

அன்பரசு சொன்னது…

இன்னுமா தினமலக் குப்பைகளையெல்லாம் படிக்கிறீங்க? அவர்கள் பத்திரிக்கை தொழில் தர்மத்தையும் கடைப்பிடிக்கவில்லை, தமிழரையும் மதிக்கவில்லை, தமிழையும் மதிக்கவில்லை. இவர்களெல்லாம் தமிழில் இன்னும் பத்திரிக்கை நடத்திக்கொண்டிருப்பதே தமிழர்களின் சகிப்புத்தன்மையினால் மட்டுமே!

பெயரில்லா சொன்னது…

I have noticed this kind of tamizh mistakes so many times on their online daily news paper. I have mentioned on their comments column. but they don't publish those comments. Sometimes they corrected it, but sometimes they ignore it.

They must stop talking about tamizh.

பதி சொன்னது…

இந்த குப்பையினை காசு கொடுத்து வாங்குவதை மட்டுமல்ல, இணையதளங்களில் சென்று படிப்பதையும் நிறுத்த வேண்டும்.

பெயரில்லா சொன்னது…

samachar,teakadaibench,album,free,bowlergaL
ithellam inraya thinmalathin sila tamil vaarthaigal.

மங்களூர் சிவா சொன்னது…

/
இது மாணவ-மாணவிகளுக்கு தெரியாமல் இருந்தால், அது மாணவப்பருவம் என்பதால் மன்னி்க்கக்கூடிய குற்றமே.
ஆனால் ஒரு ஆசிரியைக்கு தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.

இந்த உண்மை தினமலர் ஆசிரியர் குழுவினருக்கும் தெரியவில்லை என்பதை எப்படி விமர்சிப்பது எனறு தெரியவில்லை. இந்த லட்சணத்தில் இந்த கடிதத்திற்கு 1,000 ரூபாய் பரிசு வேறு.
/

வெட்கக்கேடு
:(((

சாத்தான் சொன்னது…

'நூ' என்ற எழுத்தில் நு தனியாகவும் கால் தனியாகவும் போடுவதற்காகவே தினமலரைப் புறக்கணிக்கலாம்.

கைப்புள்ள சொன்னது…

நானும் இதை பத்தி இன்னிக்கு எழுதலாம்னு இருந்தேன். இ.உ.இ. பகுதியில் இடம்பெறும் பல கடிதங்கள் உடான்ஸ் என்பது என் கருத்து. அதை மெய்ப்பிக்கும் வகையில் வெளிவந்துள்ளது நேற்று பிரசுரமான இக்கடிதம். ஒன்னு யாரோ ஒருவர் எழுதியதாக தினமலரே எழுதி வெளியிட்டிருக்கக் கூடும். இல்லை என்றால யாரோ ஒரு விஜய் பித்து தலைக்கேறிய ஒரு வாசகர்/கி, விஜய் பாடல்களின் பெருமையை நிலைநாட்டுவதற்காக இப்படியெல்லாம் எழுதிப் போட்டிருக்கக் கூடும். (இப்படி எல்லாம் ஏன் யோசிக்க வேண்டியுள்ளதென்றால் தமிழாசிரியர்களின் தமிழறிவு இவ்வளவு தான் என்பதை நம்பக் கடினமாக இருக்கிறது). இதெல்லாம் இல்லைன்னா உண்மையிலேயே வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் இது. அதற்கு ஒரு பத்திரிகை 1000ரூபாய் பரிசு வழங்கியிருப்பது இன்னும் வேதனையானது. இயல், இசை, நாடகத்தை முத்தமிழ் என்று கொண்டாலும் கூட தமிழின் வகைகள் இயல், இசை, நாடகம் என்று எழுத வில்லை என்றால் எந்த தமிழாசிரியரும் இதற்கு மதிப்பெண் அளிக்க மாட்டார்கள்.

(தயவு செய்து உங்கள் அடைப்பலகையில் ஃபாண்ட் வண்ணத்தை மாற்றவும். படிப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது. நன்றி)

முரளிகண்ணன் சொன்னது…

பெருங் கொடுமை

யாத்ரீகன் சொன்னது…

தினத்தந்தியின் ஞாயிறு/குடும்ப மலர் இணையத்தில் படிக்கத்தோன்றியது (ஊரில் சலூன் கடையில் படிக்கும் பழக்கம்) அதில் இருக்கும் பிழைகள் பார்த்தால் சி.பா.ஆதித்தனார் தற்கொலையல்ல கொலைகள் பண்ணுவார்... எ.கொ.ச !!!!!!!!!!!!

Unknown சொன்னது…

அது சரி. வேற எந்த தமிழ் பத்திரிகை நல்ல தமிழ பயன் படுத்துது? தினமலர் பத்திரிகை விருப்பு வெறுப்பு இல்லாமல் செய்தி போடுவதால் விமர்சனகளுக்கும் குறைவில்லை. நமது நடை, உடை, பாவனைகளில் தமிழை பயன்படுத்துவோம். ஐயா, ஆவி, ஜூவி, குமுதம், நக்கீரன், முரசொலி, டெய்லி தந்தி, தினமணி இதையல்லாம் படிங்க சாமி!

Vatsala Dorairajan சொன்னது…

naan pallikkoodathil thamizh padithathillai. naan thamizh vittileye padithu dhan katrukkonden. adhanal enakku illakkana kurippugala avvalavu theriyadhu. aanal thinamalarin thamizh vinodhamaga iruppadhai naanum unarndirukkiren. damaal, suuperappu ponra varthaigalai thinamalaril adikkadi kaanalam. janaranjakamaga ezhuthuvathaaga ninaithu, thamizhin tharathai kuraithuvidugirargal.

Senthil சொன்னது…

kodumai

Baby RAMACRSHNA சொன்னது…

தமிழை பலவீனப்படுத்தவும், முழுமையில்லாத ஒரு மொழியாகக் காட்டவும், பிறமொழி கலப்பு தவிர்க்க இயலாதது என்று சிந்தைத்திறனற்றவர்களை நம்பச்செய்யவுமே இது காலங்காலமாக இந்த சூழ்ச்சியைக் கையாள்கிறது.

Baby RAMACRSHNA சொன்னது…

"அபேஸ், அம்பேல், கல்தா, லோக்சபா, ராஜ;யசபா, டமால், டுமீல்" ஆகிய பொருட்செறிவுமிக்க சொற்களை வேறு எந்த நாளிதழிலும் நீங்கள் காணமுடியாது.

mraja1961 சொன்னது…

பதி சொன்னது…

இந்த குப்பையினை காசு கொடுத்து வாங்குவதை மட்டுமல்ல, இணையதளங்களில் சென்று படிப்பதையும் நிறுத்த வேண்டும்.

yes yes yes.
maharaja

pavbalane சொன்னது…

எல்லோரும் தமிழ் ஓசை வங்கி படியுங்கள் !!!!!?????????????????????

கருத்துரையிடுக