இந்நிலையில் கடந்த ஜூலை 23ம் தேதி காலையில், இம்பால் நகரின் சட்டசபை வளாகத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் இருக்கும் க்வைரம்பான்ட் கெய்தல் கடைவீதிப்பகுதியில் மணிப்பூர் போலிஸ் கமாண்டோப் படை தீவிரவாதிகள் மீதான தேடுதல் வேட்டையை நடத்தியது. அப்போது அப்பகுதியில் சஞ்சித் இருந்துள்ளார்.

கமாண்டோ படையினர் அவருடன் பேசிக்கொண்டிருந்ததாகவும் தெரிகிறது.

கமாண்டோ படையினருக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

அவரிடம் ஆயுதங்கள் இருந்ததற்கான அறிகுறியே தெரியவில்லை.

அவர் முகம் எந்தவிதமான பதற்றமும் இல்லாமல் மிகவும் இயல்பாக இருந்தது.

திடீரென சஞ்சித்தை வளைத்துப்பிடித்தனர் கமாண்டோ படையினர்.

அவரை அருகிலிருந்த மைமு மருந்துக்கடையினுள் இழுத்துச் சென்றனர்.



சஞ்சித்தை விசாரிக்க முனைந்தபோது அவர் 9எம்எம் கைத்துப்பாக்கியால் சுட முயற்சி செய்ததாகவும், எனவே வேறு வழியின்றி கமாண்டை படையினரின் தற்காப்புக்காக அவர் கொல்லப்பட்டார் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆனால் சஞ்சித்தின் குடும்பத்தினரோ, நோயுற்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த அவரது உறவினருக்கு மருந்து வாங்குவதற்காகவே சஞ்சித் அப்பகுதியில் இருந்ததாகவும், அவரிடம் ஆயுதங்கள் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை என்றும் கூறுகின்றனர்.

இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக்காரர், அவரது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் அச்சம் இருப்பதால் இந்த புகைப்படத்தை வெளியிட துணியவில்லை. ஆனால் டெஹல்கா பத்திரிகையின் செய்தியாளர் தெரசா ரஹ்மானுக்கு இந்த சம்பவம் குறித்தும், புகைப்படம் குறித்தும் தகவல் கிடைத்தது. இதையடுத்து மணிப்பூர் கமாண்டோ படையினரின் இந்த வீரசாகசம் டெஹல்கா, 8 ஆகஸ்ட் 2009 இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தின் ஆட்சி நடப்பதாக கூறும் இந்தியாவில் மணிப்பூரில் மட்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கவில்லை. நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளே நடந்து வருகின்றன. ஆனால் இதுபோன்ற புகைப்பட ஆதாரங்கள்தான் சிக்குவதில்லை.
10 கருத்துகள்:
PICTURÍE SUPER
நடிகர், நடிகைகளின் படுக்கை அறைக்குள் புகுந்து அவர்களின் உள்ளாடைகளை மோப்பம் பிடிக்கும் தமிழ் ஊடகச்சூழலில் இதுபோன்ற மக்கள் சார்ந்த ஊடகச் செயல்பாடுகளை தமிழில் தருவதற்கு நன்றி.
நன்றி தோழர், நான் இதை இங்கிருந்து எடுத்து வெறு சில தளங்களில் மறுபதிவு செய்துள்ளேன்.
அடப்பாவிகளா, நிராயுதாபானி நபர் ஒருவரை இப்படியா அநியாயமாய் எந்தவித ஈவிரக்கமும் இன்றி சுட்டு கொள்வார்கள்? மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சமுதாயத்தின் மீது ஆக்கறை உள்ள டெஹல்கா போன்ற தைரியமான ஊடகவியலார் இந்த செய்தியை வெகுஜன மக்கள் அறிய கொடுத்ததற்கு நன்றி.
பதிவு பகிர்ந்தமைக்கும் நன்றி.
கொடுமை..
மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிட்ட அரசியல்வாதிகளால் உருவாக்கப்பட்ட போலித்தனமான ஜனநாயக அரசியலமைப்புதான் எல்லாவற்றுக்கும் காரணம்..
சினிமா, வியாபாரம், கவர்ச்சி, வெகுஜன செய்தி என்று மக்களை மூடத்தனத்துக்குள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் நம்முடைய ஊடகங்களுக்கு இது ஒரு செய்தி அவ்வளவுதான்..
நாளை அவர்களது கழுத்துக்கே கத்தி வரும்போதுதான் தெரியும்..!
என்ன சார் பகிடியா விடுறீங்க? நம்ம நாட்டில பிரபாகரனை கொல்லுறம்,கொல்லுறம் என்று எங்கட பேய் அரசுடன் சேர்ந்து உங்கட காட்டுமிராண்டி அரசு என் சொந்தங்களை பலியிட்டு இன்னும் பாரத மாதாவின் சேலையில் இருந்து இரத்தம் காயல,இதில ஒரு என்கவுண்டர் பண்ணினதுக்கு இப்பிடி அலட்டிறீங்க,
அது சரி காந்தியையே சுட்டு கொன்ற காட்டு மிராண்டி தேசத்தில் சட்டம் ஒழுங்கு சீராய் இருந்திட்டாலும்.........?
வாழ்க பாரதம்!!!!!! ஜெய் ஹிந்
"பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்"
உங்கள் அரசால் பாதிக்கபட்ட ஈழத்து மகன்
சேகுவேரா
தெகல்கா போன்ற பத்திரிகைகளின் பணி தொடரட்டும்.
மணிப்பூரில், கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 32 போலி என்கவுண்டர்கள் எந்தவித விசாரணையும் இன்றி
http://www.ndtv.com/news/videos/video_player.php?id=1143894
வடகிழக்கு மாநிலங்களில் நிகழும் சம்பவங்களைப் பற்றிய எனது சமீபத்திய பதிவு
http://pathipakkam.blogspot.com/2009/08/blog-post.html
முகவைத்தமிழன், மாசிலன், உண்மைத்தமிழன்,AMMA, பதி மற்றும் பெயரிலி நண்பர்களுக்கு, கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
இது போன்ற மனித உரிமை மீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதும்,இது குறித்து விவாதிப்பதும்கூட இது போன்ற அநீதிகளை தவிர்க்க - தடுக்க உதவலாம். இந்த பணியில் ஈடுபட்ட உங்களுக்கு மீண்டும் நன்றி.
நல்ல பதிவு, சுந்தரராஜன்.
நீங்கள் ஊடகத்தில் பணியாற்றியபோது நடந்த என்கவுண்டர்களைப்பற்றி அப்போது எழுத முடிந்திருக்காது. இப்போது எழுதலாமே.
நண்பர் சுந்தரராஜனுக்கு,
நீங்கள் தொடர்ந்து எழுதுவது மகிழ்ச்சி தருகிறது. உங்கள் இணையம் குறித்து இன்று செய்தித்துறை நண்பர்களுடன் பேசியபோதுதான் தெரிய வந்தது.
மீடியாவின் உள் அரசியல் அனைத்தும் ஓரளவு தெரிந்த நீங்கள் அது குறித்து உங்கள் விமர்சனங்களை அவ்வபோது எழுதினால் மீடியாவில் மீதமிருக்கும் எங்களைப்போன்றவர்களுக்கு பயன்படுமே.
கல்பாக்கம் ஒரு செய்தியாளனின் அனுபவம் போன்ற கட்டுரைகளை தொடர்ந்து எழுதுங்கள்.
நன்றி.
கருத்துரையிடுக