19 ஆகஸ்ட், 2009

நான், அனிதா, கடவுள்...!

விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அனிதா என்ற இளம்பெண்ணை சந்தித்தேன். கிறித்தவ மதபோதகர்களுக்கான கல்வி பயில்வதாக தெரிவித்தார். மேலும் தனக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார். அதுவரை மதபோதகர்கள் அனைவரும் பிரம்மச்சரியம் கடைபிடிப்பவர்கள் என்று கருதிவந்த நான் என் கருத்துகளை அப்-டேட் செய்து கொண்டேன்.

அறிமுகங்கள் முடிந்த நிலையில் எங்கள் பேச்சு வேறு திசையில் சென்றது. இறையியல் பாடத்திட்டம் குறித்து தொடங்கிய விவாதம், கேரள மாநிலத்தில் உருவான விடுதலை இறையியல் (Liberation Theology) நோக்கி திரும்பியது.

அப்போது எனக்கு தோன்றிய ஒரு சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்: கடவுள்தான் உலகையும், மற்ற அனைத்தையும் படைத்தார் என்றால் உலகில் உள்ள சமத்துவமற்ற நிலைக்கும் அவர்தான் பொறுப்பு! இந்த சமத்துவமற்ற நிலையே அனைத்து மனித உரிமை மீறல்களுக்கும் காரணம் என்றால், இந்த சமத்துவமற்ற நிலையை உருவாக்கி, பாதுகாத்து வரும் கடவுளின் விருப்பம் அதுதான்!!இந்த நிலையில் மனித உரிமைகளை பாதுகாக்கவும், ஆதிக்கமற்ற சமூகத்தை ஏற்படுத்தும் பணியிலும் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரான செயல் அல்லவா? கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?? கடவுளை ஏற்றுக்கொள்பவர்கள் எந்த நோக்கத்திற்காகவும் கடவுளை தொழலாம், பிரார்த்தனை செய்யலாம். ஆனால் நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது கடவுளின் விருப்பத்திற்கு எதிரானது அல்லவா? என்று கேட்டேன்.

இது போன்ற விவாதங்கள் தாம் பயிலும் கல்வி நிலையத்திலும் அவ்வபோது நடைபெறுவதாகவும், இதுவரை இந்த கேள்விக்கான பதில் கிடைக்கப்பெறவில்லை என்றும் தோழி அனிதா கூறினார். எனினும் இந்த கேள்விக்கான பதில் தெரிந்தால் உடன் தொடர்பு கொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

-000-

லகம் முழுவதும் மனித உரிமைத்தளங்களில் மிக அதிக அளவில் செயல்படுவது கிறித்துவ மதம் சார்ந்த அமைப்புகளும், நபர்களுமே. மிகப்பெரிய மனித உரிமை அமைப்புகள் கிறித்தவ மத நிறுவனங்களின் நிதி உதவி மற்றும் ஆலோசனை அல்லது கட்டளைப்படிதான் நடக்கின்றன.

தற்போது இஸ்லாம் மதத்தினரும் மனித உரிமைகள் குறித்து பேசுகின்றனர். ஆனால் அது சற்று வேறு விதத்தில் அமைந்துள்ளது. கிறிஸ்தவர்கள் பேசும் மனித உரிமைகள், கடவுள் மறுப்பாளர்களின் உரிமையையும் உள்ளடக்கியதாக தோன்றுகிறது. உலக அரசியல் சூழலில் இந்த கருத்தே, ஐக்கிய நாடுகளின் கருத்தாகவும் உள்ளது. ஆனால், இஸ்லாமியர்கள் பேசும் மனித உரிமைகளோ மதம் சார்ந்த நபர்களின், மத நம்பிக்கையிலேயே அதிக கவனம் செலுத்துகிறது.

கிறித்தவ மதம் இந்தியாவில் ஊடுருவி பரவ ஆரம்பித்த நிலையில், விவேகானந்தர் போன்றவர்கள் இந்து மதத்திலும் சமூக நோக்கை சேர்த்து புதிய பரிமாணங்களை ஏற்படுத்த முயற்சித்தனர்.

ஆனால் அடிப்படையில் அனைத்து மதங்களுமே கடவுள்தான் இந்த உலகத்தையும், மனிதர்களையும் படைத்தார். அவரது விருப்பப்படியே இந்த உலகிலுள்ள அனைத்தும் நடந்தேறுகிறது. என்று நம்புகின்றனர்.

எனில் ஒடுக்குபவனை படைப்பவனும், ஒடுக்கப்படுபவனை படைப்பவனும் கடவள்தான். கடவுளின் சித்தப்படியே ஒடுக்கப்படுபவன் தலித்தாக, சிறுபான்மையினராக, ஏழையாக, படிப்பறிவற்றவனாக, திருநங்கையாக, கருப்பினத்தவராக பிறக்கின்றனர்.

அதேபோல கடவுள் சித்தப்படியே மற்றோர் பிரிவினர் உயர் குலத்தவராக, வெள்ளைத்தோல் படைத்தவராக, பெரும்பான்மையினராக, செல்வந்தராக, படிப்பறிவுள்ளவராக, ஆதிக்க சக்தியினராக பிறந்து மற்றவர்களை ஆதிக்கம் செய்கின்றனர். இவர்களே அரசையும், வணிக நிறுவனங்களையும் உருவாக்கி பயன்படுத்தி, நமது மதம் சார்ந்த சமூக சேவையாளர்கள் மனம் நோகும் செயற்பாடுகளை செய்து வருகின்றனர்.

ஆக மொத்தத்தில் அனைத்தும் கடவுள் சித்தத்தாலேயே நடக்கிறது. இதனால் பாதிக்கப்படுவோருக்கு அது கடவுள் வைக்கும் சோதனை. அதனை மீறி அவர் கடவுளுக்கு விசுவாசமாக இருந்தால், அவர்களுக்கு கடவுள் முக்தியை கொடுப்பார்.

ஆனால், கடவுளின் சித்தத்தின்படி துன்பங்களை அனுபவிப்பவர்களை மனித உரிமைகள் என்ற பெயரில் அந்த துன்பங்களிலிருந்து விடுவிக்க முனைவது கடவுளின் சித்தத்திற்கு எதிரான செயல் அல்லவா? அல்லது கடவுளுக்கே எதிரான செயல் அல்லவா?

துன்பப்படு்ம் மனிதர்கள் மீது அக்கறை கொள்ளும் மத நம்பிக்கையாளர்கள், அந்த துன்பங்களை விலக்குமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்யலாம். அதற்கு பதிலாக நேரடி செயல்பாடுகளில் ஈடுபடுவது ஏற்புடையதுதானா?

-என்பன போன்ற கேள்விகள் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கின்றன. நன்கு அறிமுகமான சிலரிடம இது குறித்து கேட்டபோது, எனக்கு பைத்தியம் பிடித்திருக்குமோ??!! என்ற சந்தேகத்துடன் விலகி விட்டனர்.என் கேள்வியில் உள்ள நியாயத்தை தோழி அமுதா மன்னிக்கவும் அனிதா புரிந்து கொண்டார் என்று கருதுகிறேன். மேலும் இதுபோன்ற கேள்விகள், மதபோதகர்களுக்கான பள்ளி வரையிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது என்ற தகவலும் எனக்கு உற்சாகம் அளிக்கிறது.

-000-

என் கேள்விகளுக்கான பதில் உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள், ப்ளீஸ்...!

17 கருத்துகள்:

அப்பாவித் தமிழன் சொன்னது…

ஐயா, கேள்வியின் நாயகனே!

என்னதாம்ல சொல்ல வர்றீரு? ஒரு மண்ணும் விளங்க மாட்டேங்குது.

இந்த அக்குரமத்தை கேட்க கூடாதுங்கறீயளா?

இல்லை. சாமி கும்பிடுறவோ எல்லாம் செபிச்சுகிட்டிருக்க சொல்லுறியளா?

திட்டிறியலா கேள்வி கேக்கறியளா?

ஒரு மண்ணும் புரிய மாட்டேங்குது.

வெளக்கமா சொல்லித் தொலையுமய்யா

வனம் சொன்னது…

வணக்கம்

ஆம் நீங்கள் கேள்வி கேட்கின்றீர்களா, விமர்சனம் செய்கின்றீர்களா என புரியவில்லை.

என்னளவில் நான் கடவுள் மறுப்பாளி என்முன் நடக்கும் மனிதாபிமான மீறல்களை நான் கேள்வி கேட்டிருக்கின்றேன் (இவற்றை மற்றவர் தலையில் சுமத்த காரணம் தேடாமல்)

இராஜராஜன்

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி அப்பாவித்தமிழன் மற்றும் வனம்(எ)இராஜராஜன்,

மதங்களைத் துறந்த மனித வாழ்வில் மட்டுமே மனித உரிமைகள் பாதுகாக்கப்படும் என்று நம்புகிறேன். எனினும் என் நண்பர்களோ மத நம்பிக்கைக்குள்ளேயும் மனித உரிமைகளை பாதுகாக்க முடியும் என்று நம்புகின்றனர்.

அவர்களுக்கான கேள்விகள்தான் மேலுள்ளவை. அதில் விமர்சனமும் இருக்கலாம்.

மதநம்பிக்கையாளர்கள் யாராவது பதில் சொன்னால் உங்கள் கேள்விகளுக்கு விடை கிடைக்கலாம்.

பார்ப்போம்.

பெயரில்லா சொன்னது…

என்ன வக்கீல் சார். எளிமையாக எழுதுவதுதான் என் பாணி என்று கூறி வந்த நீங்கள் எழுதியதா இது.

ஏன் இந்த விபரீதம் :(

அகராதி சொன்னது…

லொள்ளு?

சுந்தரராஜன் சொன்னது…

லொள்ளு!

பெயரில்லா சொன்னது…

//என்னதாம்ல சொல்ல வர்றீரு? ஒரு மண்ணும் விளங்க மாட்டேங்குது. //

உண்மைத்தமிழன் சொன்னது…

ஆக..

என்ன சொல்ல வர்றீங்க..?

ஒரு மனுஷன் கஷ்டப்பட்டான்னா அது கடவுள் கொடுத்த நிலைமை. அதை அவன் அனுபவிச்சுத்தான் ஆகணும்.. இடைல நீ போய் அவனுக்கு உதவி பண்ணி கடவுள் கொடுக்குற வேலையை கெடுக்கக் கூடாதுன்னு சொல்றீரு..

கரீக்ட்டா..?

இப்ப எனக்கு ஒரு வில்லங்கம் வந்திருச்சு.. கஷ்டம்தான்.. முருகன் கொடுத்த சோதனைதான்.. அந்த சோதனையைத் தீர்க்க ஒரு வக்கீலை கை காட்டுறான்.. அந்த வக்கீல் எனக்கு உதவி பண்ணி சிக்கலைத் தீர்த்துவிடுறாரு.. ஸோ.. இந்த வக்கீலும் எனக்கு முருகன்தான்.. அந்த முருகன்தான் இந்த முருகன்கிட்ட போக வைச்சாரு.. அதுனாலதான் போனேன்..

இரண்டுமே ஒன்றுதான்..!

ஒன்று செய்தாலும், அதன் தொடர்ச்சியான உதவிகளைக் கொடுப்பதுகூட ஆண்டவன் கொடுப்பதுதான்.. அதை செய்ய வேண்டியவர்கள் செய்துதான் தீர வேண்டும்..

ஒரு பிரச்சனையோடு முடிந்துவிடும் என்றால் உலகம் இவ்ளோ தூரம் பயணித்திருக்காது.. என்றோ தன் ஆயுசை முடித்திருக்கும்..!

பெயரில்லா சொன்னது…

//விவசாயிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அனிதா என்ற இளம்பெண்ணை சந்தித்தேன். //
//தற்போது தோழி அமுதா, என் கேள்வியில் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டார் என்று கருதுகிறேன்.//

Is it Anitha or Amutha? How many girl friends do you have? Don't you have any other matters to discuss with girl friends?

Poi Kadalai Podunga Sir!

சுந்தரராஜன் சொன்னது…

Sorry! It is Anitha. The number of my girl friends is not the matter here. And I can't roast the usual ground-nut with a bible learning girl. Okkkkkkkkkkkk!

தருமி சொன்னது…

கத்தோலிக்க மதப்பணியாளர்கள் (priests & nuns) திருமணம் செய்வதில்லை. மாற்று சபையினர் (protestants) திருமணம் செய்வதுண்டு.

//மொத்தத்தில் அனைத்தும் கடவுள் சித்தத்தாலேயே நடக்கிறது// இந்த இடத்தில்தான் கிறித்துவத்தில் (அல்லது எல்லா மதங்களிலும்) free will concept கொண்டு வரப்பட்டு, தலை சுற்ற வைப்பதுண்டு.

கடவுள் படைத்தான். மனிதனே தன் செயலால் மேலும் கீழுமாய், நல்லவனும் கெட்டவனுமாய், ஏழையாய், பணக்காரனாய் ஆகிவிட்டான் ......... இப்படியே சொல்வதையே கேட்கிறேன்.

புருனோ Bruno சொன்னது…

!!!

:) :) :)

???

:( :( :(

Anita சொன்னது…

//சுந்தரராஜன் சொன்னது…
Sorry! It is Anitha. The number of my girl friends is not the matter here. And I can't roast the usual ground-nut with a bible learning girl. Okkkkkkkkkkkk!//

Yooooooooou TOOOOOOOOOOOO Sundar...?

Muthumoorthy சொன்னது…

indha kelvigal

Muthumoorthy சொன்னது…

Sir. The article abt Ur meetin wit Anitha was described in nice way... Ur thoughts r very clear nd forward... But here the people wont understand it tat i fed up wit askin som of these questions to my frnz b4 I read this... The only reply is "all happen by the god"... I wont argue more to them bcas i kno tat they dont hav d right answer nd I dont want to hurt my frnz... Bcas it z very very difficult to make a person to think against their belief tat feeded from his/her childhood jus in 5mins or 1day...

யுவகிருஷ்ணா சொன்னது…

அண்ணன் உ.தமிழன் வாதம் அற்புதம்! :-)

கந்தனுக்கு அரோகரா..
கடம்பனுக்கு அரோகரா..

susi thirugnanam சொன்னது…

இனிய நண்பர் சுந்தரராஜன் அவர்களே, உங்கள் கேள்விகள் நியாயமானவைதான். உங்கள் கேள்விகள் மனித உரிமை அமைப்புகளுக்கு மட்டுமல்ல - அனைத்து மனிதகுல மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். மத அமைப்புகளின் மனிதகுல மேம்பாட்டு நடவடிக்கைகளில் முரண்பாடு இருப்பது உண்மைதான்.

ஆனால் அதை ஒரு சர்ச்சையாக்கத் தேவையில்லை என்பது என் கருத்து. மனிதகுல மேம்பாட்டு நடவடிக்கைகளை யார் செய்தால் என்ன? அவர்களும் செய்துவிட்டு போகட்டுமே! இதிலுமா உங்கள் வக்கீல் பார்வை?

தொடர்ந்து எழுதுங்கள்.

வாழ்த்துகளுடன்

சுசி திருஞானம்

கருத்துரையிடுக