03 நவம்பர், 2009

தண்டத்தை தூக்கி எறிந்த நீதிபதிகள்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக வருபவர்களுக்கு ஒரு ஜனநாயக நாட்டில்தான் இருக்கிறோமா? என்ற சந்தேகம் வருவதற்கு வாய்ப்புள்ளது.

நீதிபதிகள் அவர்களுடைய அறையிலிருந்து நீதிமன்ற அரங்கிற்கு வரும்போதும், திரும்பப் போகும்போதும் கையில் வெள்ளித் தண்டம் (செங்கோல்?) ஏந்திய நீதிமன்ற பணியாளர்களான தண்டாயுதபாணிகள்??!! உஸ்..உஸ்.. (இது வேறு உஸ்!) என்று ஒலியெழுப்பி நீதிபதிக்கு பாதை அமைத்து தருவதை பார்த்திருக்கலாம்.

இங்கிலாந்து நீதிமன்றங்களில் பல்லாண்டுகளாக இருந்துவரும் இந்த வழக்கம் சுதந்திர இந்தியாவின் நீதிமன்றங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் ஒருமனதாக இனி தண்டத்தை பயன்படுத்துவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர். இங்கிலாந்து காலனி ஆதிக்கத்தின் சின்னமான இந்த தண்டத்தை இனி தொடர்வதில் அர்த்தமில்லை என்று விளக்கம் நீதிபதிகள் விளக்கம் கூறியுள்ளனர். மேலும், வெள்ளியால் செய்யப்படும் ஒரு தண்டத்தின் விலை 34,000 ரூபாய் என்றும், சிக்கன நடவடிக்கை காரணமாக எதற்கும் பயன்படாத இந்த தண்டத்தை இனி பயன்படுத்துவதில்லை என்றும் கேரள நீதிபதிகள் முடிவெடுத்துள்ளனர்.

-oOo-


ர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி தினகரன், உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேதற்கு முன் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் வலையுலக வாசகர்களுக்கு தெரிந்திருக்கலாம்.

கேரள உயர்நீதிமன்ற நீதிபதி வி. கிரி, நீதிபதி பதவியிலிருந்து விலகுவதாக கூறி தலைமை நீதிபதியிடம் கடிதம் அளித்துள்ளார். இவரது தந்தையும், மனைவியும் வழக்கறிஞராக தொழில் புரிந்து வருகின்றனர்.
சொந்த விருப்பத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக தொழில் செய்வதற்காக உயர்நீதிமன்ற நீதிபதி பணியிலிருந்து விலக விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார். நீதிபதி கிரியின் பதவி விலகல் கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு அனுப்புவதாகவும், இது குறித்த இறுதி முடிவை குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல் அறிவிப்பார் எனவும் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

இன்னும் 15 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ள ஒரு நீதிபதி, தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் உயர்த்தப்படுவதற்கு வாய்ப்புள்ள நிலையிலும், நீதிபதி பதவியிலிருந்து விலகியிருப்பது, வழக்கறிஞர் தொழில்மீது அவருக்குள்ள காதலை காட்டுகிறது. ஆனால் நீதிபதி பதவிக்காக காத்திருக்கும் பலருக்கோ இது ஆச்சரியளிக்கும் செய்தியாக இருக்கிறது.

6 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

எழுதும் விடயத்தையும், விதத்தையும் இப்படி தடாலடியாக மாற்றினால் எப்படி வக்கீல் சார்?

ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு!

:)

சுந்தரராஜன் சொன்னது…

//பெயரில்லா சொன்னது…
எழுதும் விடயத்தையும், விதத்தையும் இப்படி தடாலடியாக மாற்றினால் எப்படி வக்கீல் சார்?

ஆனால் இதுவும் நல்லாத்தான் இருக்கு!

:)//

நன்றி நண்பரே!

:))))

பெயரில்லா சொன்னது…

Hello sir,

There are many changes in content and package.

What happened?

PRABHU RAJADURAI சொன்னது…

சென்னையிலிருந்து பஞ்சாப் தலைமை நீதிபதியாக சென்ற வி.ராமசாமி அனைத்து நீதிபதிகளுக்கும் தண்டம் வாங்க சென்னை நிறுவனம் ஒன்றோடு ஒப்பந்தம் செய்ததில் முறைகேடு நடந்தது என்பது அவரை பதவி நீக்க வேண்டும் என்ற குற்றச்சாட்டிற்கான காரணங்களுள் ஒன்று!

மும்பையில் சில வருடங்களுக்கு முன்னர் ஜாகிர்தார், அனில் சாக்கர்தாண்டே என்ற இரு நீதிபதிகள், இரு வருடங்கள் பணியாற்றி விட்டு நிரந்தரம் செய்யப்படுவதற்கு முன்னர் ஒரே நாளில் ராஜினாமா செய்தனர். அவர்களும் ஏறக்குறைய 17 ஆண்டு கால பதவியினை துறந்தனர்.

ஆனால் மீண்டும் சீனியர் வழக்குரைஞராக பணியேற்றவுடன், நீதிபதி பதவி தந்த புகழில் அவர்களின் பிராக்டிஸ் பல மடங்கு கூடிப்போனது,

நீதிபதி பதவி என்பது வழக்குரைஞர் தொழிலின் பதவி உயர்வு அல்ல!

வாசகன் சொன்னது…

சார் சுள்ளுன்னு மிளகாயை கடிச்சமாதிரி எழுதறதுதான் உங்க ஸ்டைல். அதை மாற்றாதீங்க ப்ளீஸ்.

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துப் பகிர்வுக்கு நன்றி வழக்கறிஞர் பிரபு ராஜதுரை.

மிளகாயை அளவுக்கு மீறி கடிக்கக்கூடாது வாசகன், அதனால்தான் இதுபோன்ற கடிகள்.

கருத்துரையிடுக