14 நவம்பர், 2009

சே குவேராவிற்கு எதிரானவர்கள் எனது நண்பர்கள் – ஜக்கி வாசுதேவ்!

ஈழப்போரின் உக்கிர நிலையில் மற்றவர்களைப்போலவே உள்ளம் கொதித்தவர்களில் சில பத்திரிகையாளர்களும் இருந்தனர். இந்திய மற்றும் தமிழ் ஊடகங்களின் துரோகம் குறித்து பேசுவதற்கு ஆயிரம் சங்கதிகள் இருந்தும், அதற்கான களம் அமையாத நிலை. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், அதை அனுசரித்து இருக்கவேண்டிய ஊடகச்சூழல் காரணமாக பல செய்திகள் பதிவு செய்யப்படாமல் மரித்துப் போயின.

செய்தியாளர்களில் சிலர், பணியாற்றும் ஊடகங்களில் பகிர முடியாத சங்கதிகளை மின்-ஊடகங்களில் பகிர்ந்தனர். போருக்கு முன்னதாகவும், பின்னரும் இது குறித்து அக்கறையும், ஆர்வமும் கொண்ட பல பத்திரிகையாளர்கள் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் அமைப்பு என்ற பெயரில் கூட்டுச்செயல்பாடுகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. பிறகு தமிழர்களுககே உரிய ஒற்றுமை காரணமாக இந்தப் பெயரில் செயல்படுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன.

இதற்கிடையே விகடன் குழுமத்தில் பணியாற்றிய திரு. த. செ. ஞானவேல் மற்றும் சில நண்பர்கள் ஈழப்போர் குறித்த புகைப்படங்களையும், அந்தப் படங்கள் குறித்த பிரபலங்களின் கருத்துகளையும் திரட்டி வெளியிடுவதற்கு திட்டமிடுவதாக தெரிந்தது.

ஒரு நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க இந்த தொகுப்பில் இடம் பெறும் ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகை நந்திதா தாஸ், மு. அனந்தகிருஷ்ணன் ஆகியோரின் கருத்துகளை தமிழாக்கி கொடுக்கும் வேலையும் செய்தேன்.

இந்தப் பணியில் ஈடுபட்ட அனைவருமே ஈழப்பிரசினையில் உண்மையான அக்கறையும், ஈடுபாடும் கொண்டவர்கள் என்பதில் எனக்கு எள் முனையளவும் ஐயமில்லை. இவர்களில் நான் நன்கறிந்த அனைவரும் பெரியாரிய மற்றும் பொதுவுடைமை கருத்துடையவர்கள்.

-----

"ஈழம்: மெளனத்தின் வலி" என்ற நூல் இறுதி வடிவம் பெற்று, வெளியீட்டுக்கான நாள் குறிக்கப்பட்டு எனக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பிதழும் வந்தது. நாம் என்ற அமைப்பும், நல்லேர் பதிப்பகமும் இணைந்து அந்த நூலை வெளியிடுவதாக நான் புரிந்து கொண்டேன்.

14-11-09 சனிக்கிழமை! சில நாட்களாக விட்டிருந்த மழை மீண்டும் அடித்துப் பெய்தது. ரெயின் கோட் சகிதமாக அரங்கிற்கு சென்றேன். அரங்கு ஏறக்குறைய நிறைந்திருந்தது. ஈழப்பிரசினை குறித்த நிகழ்ச்சிக்கு வழக்கமாக வருபவர்களை காணோம். அதற்கு பதிலாக உயர்நடுத்தர வகுப்பைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்களும், பெண்களும், ஆண்களும் அரங்கை ஆக்கிரமித்திருந்தனர்.

அரங்கின் வெளியே நக்கீரன் பத்திரிகையில் இலங்கைப் பிரசினை குறி்த்து தொடர்ந்து எழுதும் ஜகத் கஸ்பார் நின்று கொண்டு விஐபிக்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். ஜகதீஷ் என்ற ஜக்கி வாசுதேவ், நடிகர் பிரகாஷ்ராஜ் ஆகியோர் வரவே நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கின் முதல் தளத்தில் பத்திரிகை நண்பர்கள் இருவருடன் அமர்ந்திருந்தேன். ஏராளமான கூட்டம் சேர்ந்திருந்தது.

நிகழ்ச்சி தொடங்கியது.

"ஈழம்: மெளனத்தின் வலி" தொகுப்பிலிருந்து சில கவிதைகளை நடிகர் சிவகுமார் வாசித்தார். தொடர்ந்து திரைப்பட இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ், நடிகர் பிரகாஷ் ராஜ், பாதிரியார் சின்னப்பா ஆகியோர் பேசினர்.

"சத்குரு"வின் பெயர் உச்சரிக்கப்பட்டபோதெல்லாம் அரங்கில் இருந்த அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். ஈழப்பிரசினை குறித்து சென்னையிலேயே பல நிகழ்ச்சிகள் நடந்தபோதெல்லாம் திரும்பிக்கூட பார்த்திராத உயர்நடுத்தர வர்க்க மக்கள் அனைவரும் சத்குருவின் சீடர்கள் என்பது அப்போதுதான் புரிந்தது. ரஜினிகாந்த், அப்துல் கலாம் ஆகியோரைவிட பிரபலமாக ஜக்கி இருப்பது தெரிந்தது.
தொடர்ந்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசினார். அவரது பேச்சு வழக்கம்போல, ஈழப்பிரசினை குறித்த மக்களின் உணர்வுகள் திமுகவிற்கு எதிராக திரும்பிவிடாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே இருந்தது. ஈழத்தில் கொல்லப்பட்டது தமிழர்கள் என்பதால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். (மத்திய அரசில் இடம் பெற்ற தமிழக அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று சொல்லவில்லை) தமிழ்நாட்டில் ஜெயலலிதாவுக்கு ஆதரவளித்த தமிழக அரசியல் தலைவர்களை கிண்டல் செய்தார். குறைந்தபட்சமாக இந்த கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். அனைத்திந்திய ஊடகங்கள் ஈழச்செய்திகளை இருட்டடிப்பு செய்ததை வருத்தத்தோடும், கோபத்தோடும் பதிவு செய்தார். (தமிழகத்தின் பிரதான தொலைக்காட்சிகளும் அந்த நிகழ்வுகளை இருட்டடிப்பு செய்ததை குறிப்பிட அவர் மறந்து விட்டார்).

இறுதியாக ஜகதீஷ் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ் சுமார் 40 நிமிடங்கள் அருள்வாக்கு வழங்கினார். அனைவரும் பேசிய இடத்திலிருந்து, (அந்த இடம் தீட்டாகி இருக்கும் போலிருக்கிறது) மைக்கை வேறு இடத்திற்கு மாற்றிப்போட்டு பேச்சைத் தொடங்கினார். ஈழத்துப் பிரசினைகளை குறிப்பிட்டு பேச்சைத் தொடங்கிய அவர் என்னென்னவோ பேசினார்.
போராட்ட உணர்வே மக்களுடைய அமைதிக்கு எதிராக இருப்பதாக கூறினார். போராடுவது என்று முடிவெடுத்தால், போராட்டங்களுக்கு முடிவே இருக்காது. இதனால் மனிதனின் வாழ்வு பெரும் சோகமாகவே இருக்கும். ஒரு பிரசினையால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு எதிராக போராடும்போது, மற்றொரு தரப்பு பாதிக்கப்படும். பிறகு அந்த தரப்பு போராடும். எனவே போராடுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

அநீதிக்கு எதிராக உன் ரத்தம் கொதி்த்தால் நீயும் நானும் சகோதரர்கள் என்று சே குவேரா கூறியதாக குறி்ப்பிட்ட சத்குரு, இது மிகவும் தவறான கருத்து என்று குறிப்பிட்டார்.
சே குவேராவின் கூற்றிற்கு எதிராக இருத்தலே நல்லது என்று கூறிய சத்குரு, சே குவேராவின் கருத்திற்கு எதிரான கருத்து கொண்டவர்கள் தமது சகோதரர்கள் என்று பிரகடனம் செய்தார்.

சத்குருவின் இந்த வார்த்தைகள் ஏதும் அவரது ரசிகர்கள் (அல்லது) பக்தர்களின் காதுகளில் விழுந்ததா என்பதே தெரியவில்லை. ஏறக்குறைய அவர்கள் அனைவருமே பரவச நிலையில் இருந்தனர்.
பலர் வாய் கொள்ளாத சிரிப்பு அல்லது தாளமுடியாத அழுகையில் இருந்தனர். அவர்களது மனநிலை குறித்து ஆராய்வதற்கு மனநிலை மருத்துவர்கள் யாரும் இல்லாததால் மேற்கொண்டு வர்ணிக்க முடியவில்லை.

நல்லவேளையாக ஜகதீஷ் என்ற சத்குரு ஜக்கி வாசுதேவ், வழக்கமாக புகைப்படத்தில் காட்சியளிப்பதுபோல நடனம் அல்லது வேறு செயல்பாடுகளில் ஈடுபடாமல் அமைதியாக அமர்ந்தார்.

சே குவேரா குறித்த சத்குருவின் கருத்திற்கு மேடையில் இருந்த இன உணர்வாளர்கள் ஏதாவது எதிர்வினை ஆற்றுவார்கள் என்று அரங்கில் இருந்த மிகச்சில இன உணர்வாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மேடையில் இருந்த உணர்வாளர்களும் பரவச நிலையில் இருந்திருக்க வேண்டும் அல்லது அவர்களும் சே குவேரா குறித்த சத்குருவின் கருத்தை ஏற்றிருக்க வேண்டும்.
யாரும் எதுவும் கேட்கவில்லை. மருத்துவர் எழிலனின் நன்றியுரையோடு நிகழ்வு நிறைவடைந்தது.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், பக்தர்களுமாய் சத்குரு ஜக்கியை வழியனுப்ப காத்திருந்தனர். அழுகையும், சிரிப்புமாய் காத்திருந்த பக்தர்களிடம் விடைபெற்ற ஜக்கியின் கார் விரைந்து வெளியேறியது.

எனினும் ஜக்கியின் தொண்டர்கள் சத்குரு நடத்தும் சில ஆயிரங்கள் கட்டணம் செலுத்தி படிக்கவேண்டிய யோகா வகுப்பு குறித்த விளம்பர துண்டறிக்கைகளை கொடுத்த பின்னரே சென்றனர்.

-----

நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் சிலரிடம் பேசினேன். நல்ல எண்ணத்தில்தான் இந்த பணியை துவங்கினோம். ஆனால் இந்த அளவுக்கு விமர்சனம் வரும் என்று நினைக்கவில்லை என்றனர்.

நல்ல செயல்களை செய்வதற்கு நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது என்பது புரிந்தது.

30 கருத்துகள்:

AboutSriLanka.WordPress.com சொன்னது…

Thank You for writing this.
The most important thing is that you wrote down what happened and made it available to the public.

- யெஸ்.பாலபாரதி சொன்னது…

அண்ணே..

அவரைப் பார்த்தாலே.. எல்லோரும் பரவச நிலைக்கு போய்டுவாய்ங்க..!

நீங்களாவது தப்பிச்சு வந்தீங்களே.. :)

http://4.bp.blogspot.com/_NFjpiD6NQNU/Stra4LdrAOI/AAAAAAAAA-U/RZILxtSBCFw/S312/kalaingar+comedy.jpg

மேற்கண்ட சுட்டியில் இருப்பது மாதிரி போஸ்டர் அடிக்கிற ஜனங்களுக்கு மத்தியில் தான் இருக்கிறோம்.. என்ற நினைப்பே பல சமயங்களில் அசூயையை ஏற்படுத்தி விடுகிறது.

ஈழம் விசயத்தில்.. இங்கு பிரபலமாக இருக்கும் ஒருவனையும் நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு! சாதாரண கடை நிலைத் தொழிலாளிக்கு இருக்குறதுல 1% கூட இவனுங்களுக்கு அக்கரை இல்லை என்பது கண்கூடு!

சே- வைப்பொருத்தவரை அமெரிக்காவால் சந்தைபடுத்தப்பட்ட ஒரு வியாபாரப்பொருளாகத்தான் பிரபலங்களுக்குத் தெரியும்.. அல்லது.. அப்படி கட்ட மட்டுமே அவர்களும் விரும்புகிறார்கள் என்பதால்.. ‘நோ’கமெண்ட்ஸ்!

சரி..பகிர்வுக்கு நன்றி..!

சுந்தரராஜன் சொன்னது…

கருத்துப்பகி்ர்வுக்கு நன்றி, AboutSriLanka.WordPress.com, ♠ யெஸ்.பாலபாரதி ♠

பெயரில்லா சொன்னது…

நக்கீரன் ஏட்டில் வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வருகிறார். தமிழகத்தை சேர்ந்த பிரபல கவிஞ்ர்களில் ஒருவரான திரு. பழமலாய், சத்குருவிடம் ஒரு கேள்வி கேட்டிருக்கிறார். நீங்கள் மரம் நடுவதற்கு ஆகும் செலவுகளை கோக், பெப்ஸி, போன்ற அமெரிக்க பன்னாட்டு குளிர்பான கம்பெனிகளிடம் பெறுவது உண்மையா என்றும், இந்த கம்பெனிகள்தானே இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளை லாபத்திற்கு விற்று கொழுக்கின்றன. அவர்களிடமே சென்று மரக்கன்று நட நிதி பெறுவது நியாயமா என்பது தான் அந்த கேள்வியின் சாராம்சம்.

உடனே வந்தது கோபம், கோபத்தில் விளைந்த, ஆத்திரத்தின் மூலம் தான் பணம் வாங்கிய உண்மையை ஜக்கி ஒத்துக்கொண்டார். இதற்கு மிக பெரிய விளக்கம் வேறு.

இன்றைய உலகில் பொருளாதார கட்டமைப்பு தேச எல்லைகளை தாண்டிவிட்டது. இன்றைய சூழலில் ஒரு வணிக நிறுவனத்தை குறிப்பிட்ட தேசத்துடன் அடையாளப்படுத்த முடியாது. இந்த நிலை தொடர்ந்தால், எதிர் காலத்தில் ஒரே உலகம் என்ற நிலையை எட்ட வாய்ப்பிருக்கிறது - ஜக்கி வாசுதேவ்

இதை தான் பல காலமாக அமெரிக்கா ஒரு துருவம், ஒரு உலகம் என்று கூறி வருகிறது. உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், அமெரிக்காவின் கீழ் வரவேண்டும் என்று பல நாட்களாக புஷ் கனவு காண்கிறார். இதை தான் ஜக்கி அவர்களும் பிரதிபலிக்கிறார்.

மினரல் வாட்டர் இந்தியர்கள் தங்களது ஆரோக்கியத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் விரும்பி வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனம் இந்திய குடி தண்ணீரை உறிஞ்சுகின்றன என்று கூறுவதெல்லாம் பழமையில் ஊறிய சிந்தனை - ஜக்கி வாசுதேவ்

அடடா, என்ன ஒரு கருணை, இந்தியாவில் கோடி கணக்கான மக்களுக்கு பாதுகாக்க பட்ட குடிநீர் கிடைப்பதில்லை என்பது ஜக்கிக்கு தெரியாதா? இந்தியர்கள் குடிப்பதற்கு தண்ணீர் தர வக்கில்லாத அரசாங்கம் தாமிரபரணியில் தினமும் சுமார் 1,00,000 லிட்டர் தண்ணீரை உறிஞ்ச கோக்கிற்கு அனுமதி அளிக்கிறது தமிழ் நாடு அரசு. 90 பைசாவிற்கு ஒரு லிட்டரை அரசிடம் வாங்கி பாட்டிலில் அடைத்து 10 ரூபாய்க்கு மேல் விற்கிறது. ஏன் இதை அரசால் குறைந்த விலையில் தர முடியாதா?

கோக் நிறுவனம் அமெரிக்காவிலிருந்தாலும், இந்தியாவில் அதன் உரிமத்தை இந்தியர்கள் தான் பெற்று உள்ளனர் என்று சப்பைக் கட்டு கட்டுகிறார் வாசுதேவ். ஆனால், அதில் கிடைக்கும் மொத்த லாபமும் அமெரிக்காவிற்கு தான் செல்கிறது என்றும் அதை கொண்டு ஆயுதங்கள் செய்து உலக மக்களை கொன்று குவித்து வருகிறது என்பது சத்குருவின் ஞான திருஷ்டியில் தெரியவில்லையா?

அப்படி அமெரிக்க குளிர்பான நிறுவனங்கள் தனது ஈஷா மையத்திற்கு நிதியுதவி அளிப்பது ஒரு வகை நிவாரணம் தான் என்றும் இவர் கூறுகிறார். நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சுவிட்டு மரம் நட நிதி தருகிறார்கள் என்பது பசுவின் மடியை அறுத்து விட்டு புன்ணாக்கு வாங்க காசு தருகிறார்கள் என்று கூறுவதற்கு சமம் ஆகும்.

குறுகிய எல்லைக்குள் நின்று வேதம் வளர்ப்பது விலங்குகளின் இயல்பு, மனிதர்கள் அதை செய்ய தேவையில்லை. நாயும், பூனையும் தங்கள் எல்லைகளை நிர்ணயிப்பது போல் மனிதன் செய்யலாகாது என்று உபதேச மழை வேறு. என் நாடு, என் மொழி, என் மக்கள், என் தண்ணீர் என்று கூறுவதெல்லாம் விலங்குகள் வளர்க்கும் பேதம். இந்தியர்களெல்லாம் கோவணத்தோடு நின்று கொண்டு அத்தனைக்கும் ஆசை பட வேண்டியது தான். விட்டால், எதற்கு தனி நாடு, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம் எல்லாவற்றையும் அமெரிக்கா பார்த்துக் கொள்ளும் என்றும் கூட இவர் கூறுவார். இப்போது தான் தெரிகிறது இவர் அடிக்கடி அமெரிக்கா சென்று வரும் ரகசியம்.

நாய்க்கும், பூனைக்கும் இருக்கும் குறைந்த பட்ச சுயமரியாதை கூட இந்தியர்களுக்கு இருக்ககூடாது அதுதான் கடவுளை அடையும் வழி என்று கூறுகிறார் ஜக்கி வாசுதேவ். இது தியானம் தந்த ஞானம் அல்ல. டாலர் தந்த ஞானம்.

பெயரில்லா சொன்னது…

நண்பர் ஒருவர் ஜக்கி வாசுதேவை உண்மையான துறவி என்றும் .. "அத்தனைக்கும் ஆசைபடு" என்பது மிகவும் அறிவுபூர்வமான ஒரு கருது எனவும் கூறிய பொது சில நினைவுகள் வந்து சென்றது அது உங்கள் பார்வைக்கு இங்கே

சகல சவுகரியா இராஜ வாழ்க்கையை தூக்கி எரிந்து ஒரே ஆடையை மட்டும் கட்டி கொண்டு அரண்மனையை விட்டு வெளியேறி ஆசா பாசங்களை துறந்து வந்தார் புத்தர் அவர் போதித்து என்ன?

ஆனால் ரய்பொன் கூலிங் கிளாஸ் அணிந்து கில்லெர் ஜீன்ஸ் போட்டு கொண்டு அசத்தலாக ஆனந்த விகடன் கட்டுரைக்கு வார வாரம் வித விதமா போஸ் கொடுத்த ஜாக்கி வாசுதேவ் சொன்னதை வைத்து அவர் தான் "உண்மையான துறவி "என்பது சற்று நெருடலான ஒன்று ..

ஜாக்கி வாசுதேவ் கார்பரேட் சாமியார்களில் ஒரே நபர்.. நான் அவரை எதிர்த்து பதிவதாக கோபபட வேண்டாம் ..

அவர் சிவராத்திரியன்று நடத்து விசேஷ கூட்டங்களில் கலந்து கொண்டு உள்ளேன் அதே போல் அவர் கொயமுதூரிஇல் தியான லிங்கம் பிரதிஷ்டை செய்த அன்று நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு அங்கு நடபவற்றை நேரடியாக கண்ட அனுபவமும் உண்டு...

ஜாக்கி வாசுதேவ் என்பவர் பிறக்கும் பொது மகானாக பிறந்தவர் அல்லர். அவர் பழையா கால வாழ்கையை புரட்டி பார்த்தீர்கள் என்றால் சில மர்மங்கள் உண்டு .

ஜாக்கி வாசுதேவின் மனைவி பெயர் 'விஜி' எனப்படும் விஜயகுமாரி .. இவர் ஜாக்கி வாசுதேவுடன் இணைந்து ஆன்மிகம், இஷா ஆஸ்ரம பணிகளை கவனித்து வந்தார் .. திடிரென்று 1997 அம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மர்மமான முறையில் இறந்தார் . அவர் பிரேதம் அவசர அவசரமாக விஜியின் தாய் தந்தையருக்கு கூட ஆசுவாசிக்க இடமிலாமல் இறுதி சடங்கு செய்யப்பட்டது .. அவர் தற்கொலை செய்து கொண்டார் என தகவல்கள் கசிந்தன ..

விஜியின் தந்தை, ஜக்கியின் மாமனாரும் ஆன தி.ஷ் . கங்கான தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் அவர் கொலை செய்யப்பட்டு அவசர் அவசரமாக இறுதி சடங்கு செய்யப்பட்டது என பெங்களூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.. பெற்ற பிள்ளையை பறிகொடுத்த தகப்பன் தன் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதையும் விஜி கொலை தான் செய்யபடுள்ளர் எனவும் அடித்து சொன்னார் .. இந்த புகாரின் அடிப்படையில் கோவை போலீசார் இஷா அஷ்ரமதுக்கு விசாரணைக்கு வந்த பொது ஜாக்கி வாசுதேவ் அவசரமாக அமெரிக்கா பறந்து விட்டார் ... ஜனவரி 23 அம் நாள் விஜி மரணமடைந்தார் .. அன்று விஜியின் பெற்றோருக்கு ஜாக்கி போன் செய்து விஜி இறந்து விட்டதாக சொல்லிவிட்டு அவர்கள் பெங்களூரில் இருந்து கோவை வரும் முன்னே சடலத்தை இறுதி சடங்கு செய்து விட்டார்.

என்ன கொடுமை இது ? பெற்ற தாய் தந்தையர் தன் மகளின் சடலத்தை பார்க்க விடாமல் இறுதி காரியம் செய்தது .. போலீசார் வழக்கு பதிவு விசாரணை செய்ய ஆரம்பித்த பொது ஜாக்கி வாசுதேவுக்கு அதே ஆச்ரமத்தை சேர்ந்த வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு அதனை விஜி தட்டி கேட்ட பொது ஏற்பட்ட தகராறினால் அவர் கொலை செய்யப்பட்டு அது தற்கொலை என ஜோடிக்க பட்டது என செய்தி கசிந்ததாக நியாபகம் ..

இந்த வழக்கின் விசாரணையின் பொது வாசுதேவ் (அப்போதையா ஜெகதீஷ்) தன் மனைவி ஒரு விதமான பிராணாயமா பயிற்சி செய்த போது மூர்ச்சையாகி விட்டார் எனவும் அது தற்செயலாக நடந்த ஒரு சம்பவம் என கூறி அவர் பண பலம் மற்றும் மேலிடது செல்வாக்கால் அந்த புகார் கிடப்பில் போடப்பட்டது .

http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post.html

பெயரில்லா சொன்னது…

ஆகவே நண்பர்களே இந்த ஜக்கி வாசுதேவின் மறுபக்கம், இளமை காலம் சற்று மர்மமானது .. உணர்ச்சி வசப்பட்டு அனைவரையும் உண்மையான துறவி என்று புகழாரம் சூடாதீர்கள் ..

என்னை பொறுத்த வரையில் வாழும் வரை மாசற்ற வைரமாக வைராக்கியமாக வாழ்ந்து மறைந்த விவேகானந்தரை துறவி என்றால் தகும் .. புத்தரை உண்மையான துறவி என்றால் தகும் .. மகாவீரரை சொன்னால் தகும் , வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய சன்மார்க்க நெறி வள்ளலாரை உண்மையான துறவி என்றால் தகும் ..

அதனி விட்டு விட்டு இந்த கில்லர் ஜீன்ஸ் ஜாக்கி வாசுதேவ் யோகா,தியானத்தை கற்று அதனை போதிக்கிறேன் என்று கூறி கொள்ளும் உலகம் சுற்றி வரும் ஒரு கார்பரேட் சாமியார் அவ்வளவு தான் .... ஜாக்கி வாசுதேவின் மாமனாருக்கு தன் மகளின் மரணத்தில் ஜாக்கி மீது உள்ள சந்தேகம் மூன்றாம் மனிதர்களான நமக்கும் இருக்குமல்லவா ? யார் அறிவார் அந்த ரகசியம் ....

இவரை போல தான் வாழும் கலை பண்டித ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரும் இவரது வாழும் கலை உறுப்பினர்கள் சமீபத்தில் நடந்த இலங்கை ina படுகொலைக்கு எதிராக போது மக்கள் நடத்திய ஒரு அமைதி பேரணிக்கு ரவி சங்கரின் பெரியா பெரியா புகைப்படங்கள் பதித்த விளம்பர பாதுகைகளை கொண்டு வந்து ஊர்வலத்தில் அவருக்கு விள்ளம்பரம் தேடி கொண்டு இருந்தனர் .. அந்த பேரணியோ அங்கு சாவும் தமிழ்ர்களை நினைத்து வருந்தி நடைபெறும் மவுன பேரணி .. எந்த ஒரு கட்சியை சேர்ந்தவர்களும் எந்த ஒரு கட்சி கோடி, தலைவர் படத்தை ஏந்தி வராத சூழ்நிலையில் இவர்கள் ரவிசங்கரின் விளம்பர படங்களை கொண்டு வந்து அதனை ஒரு விளம்பர யுக்தி ஆகி கொண்டனர் ...

ஆன்மிகத்தை நம்புவோம், உண்மையான ஆன்மீக ஆர்வலர்களை மதிப்போம் .. தனி மனித வழிபாட்டை தவிர்ப்போம் .. விவேகானந்தரை தவிர்த்து வேறு யாரையாவது கலிகால துறவி என்றால் அது ஏற்புடையது ஆகாது

http://vasanthasenan.blogspot.com/2009/03/blog-post.html

Athisha சொன்னது…

கார்பரேட் சாமியார்!

பெயரில்லா சொன்னது…

ஈழப்பிரசினை குறித்து ஏற்கனவே அறிந்திராத பொதுவெளியில், ஈழம் குறித்த சிந்தனைகளை கொண்டு சேர்க்கவேண்டும்: எனவே புதிதாக இரண்டு பேரை அழைத்து வாருங்கள் என்று நக்கீரனில் ஜகத் கஸ்பர் அழைத்திருந்தார்.

பொதுவெளியில் ஈழப்பிரசினை எவ்வாறு பக்கி மன்னிக்கவும் ஜக்கி மூலம் எடுத்து வைக்கப்பட்டது என்று விரிவாக கூறியிருக்கிறீர்கள். நன்றி.

Ariharasudhan, Canada சொன்னது…

// நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பேசினார். அவரது பேச்சு வழக்கம்போல, ஈழப்பிரசினை குறித்த மக்களின் உணர்வுகள் திமுகவிற்கு எதிராக திரும்பிவிடாமல் திசைதிருப்பும் நோக்கிலேயே இருந்தது.//

Yes this is true.

வெண்காட்டான் சொன்னது…

நக்கீரன் செய்யும் வியாபாரத்தையே இவர்களும் செய்துள்ளார்கள். இதில் ஒரு நல்ல விடயம் பாலபாரதி சொன்னதுபோல

ஈழம் விசயத்தில்.. இங்கு பிரபலமாக இருக்கும் ஒருவனையும் நம்பக்கூடாது என்ற முடிவுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு! சாதாரண கடை நிலைத் தொழிலாளிக்கு இருக்குறதுல 1% கூட இவனுங்களுக்கு அக்கரை இல்லை என்பது கண்கூடு!

என்ற உண்மையை அறிய முடியாதபடி ஊடக தணிக்கைக்குள் இருக்கும் பல்லாயிரக்கணக்கான சாதாரண தமிழ் மக்களு்கு இத்த விடயங்கள் என்ன கொடுக்கவேண்டுமோ அதை கொடுக்கும்.
மற்றும் படி ஜக்கியும் சரி கமலும் சரி செத்துதாலும் கொடுக்கும் சீதகாதி வள்ளல் தான் ஈழத்தமிழர்கள். நக்கீரனுக்கும்.. கலைஞரின் முகவராக செயற்படும் இவர் ஈழத்திற்காக ஆதரவாக இருந்த பலரை கலைஞருக்காக தூது சென்று பேரம் பேசி மாற்றியதும் இவர்தான். கலைஞர் துரோககூட்டத்தில் பெரிய நடிப்புத்திலகம் கோபால். தமிழ் மக்களையும் ஏமாற்றி சம்மாதித்து கரை கண்டவர்.

பெயரில்லா சொன்னது…

என்ன சொல்வதென்று தெரியவில்லை. இழவு வீட்டில்கூட லாபம் தேடும் இந்த ஆன்மிக வியாபாரிகளை நினைத்தால்.

கோ. கருணாகரன், மும்பை சொன்னது…

இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் உங்கள் நண்பர்கள் என்பதால் சற்று சாஃப்டாக விமரிசனம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.

ஜக்கி போன்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பதுகூட புரியாமல், அந்த கோமாளியை அழைப்பவர்களை என்ன சொல்வது. இதில் இவர்கள் படித்த, விபரம் தெரிந்த பத்திரிகையாளர்கள்! அதிலும் போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள்!!

தற்போது பத்திரிகை துறையில் முழுநேர பணியாளராக இல்லாமல் திரைத்துறையினரின் மற்றும் ஆன்மிக வியாபாரிகளின் மக்கள் தொடர்பாளராக இருக்கும் ஒரு ஆசாமிதான் இந்த நிலைக்கு காரணம் என்று அந்த நிகழ்ச்சியில் சிலர் பேசக்கேட்டேன்.

அவரும் உங்களுக்கு நண்பர் என்றால், அவரிடம் இதுபோன்றவர்களின் "இமேஜ் பில்டிங் எக்ஸர்சைஸு"க்கு, ஈழத்தமிழர்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லுங்கள்.

Saravanan சொன்னது…

Please read this article published in vinavu.com:

http://www.vinavu.com/2009/11/16/father-jegath-gaspar-raj-milks-blood/

பெயரில்லா சொன்னது…

[link]http://ww1.4tamilmedia.com/index.php/2009-04-19-22-56-08/2009-04-19-23-06-18/4055-2009-11-15-23-26-58[/link]

K.R.அதியமான் சொன்னது…

///மினரல் வாட்டர் இந்தியர்கள் தங்களது ஆரோக்கியத்திற்காகவும், சுகாதாரத்திற்காகவும் விரும்பி வாங்குகிறார்கள். அமெரிக்க நிறுவனம் இந்திய குடி தண்ணிரை உறிஞ்சுகின்றன என்று கூறுவதெல்லாம் பழமையில் ஊறிய சிந்தனை - ஜக்கி வாசுதேவ்///

இதை பற்றி பிரபல மலையாள எழுத்தாளர் பால் சாக்ரையா எழுதிய கட்டுரை இது :

http://kalachuvadu.com/issue-89/pathi03.asp

மாயாவித் திருடர்கள்

சக்கரியா
---------------------

ஜக்கியின் பல் செயல்கள் ஏற்புடையதாக இல்லாவிடினும், மூச்சு பயிற்சி மற்றும் தியானம் உடல்நலன் மற்றும் மனநலன்களுக்கு உகந்ததுதான்.
அவரின் பல கருத்துக்கள் மற்றும் பொது சேவைகள் : பாராட்டப்பட வேண்டியவையே.

அவர் தன்னை ஒரு அவதாரப்புருசன் அல்லது கடவுளின் தூதுவன் என்று சொல்லிக்கொள்ளும் போலி சாமியார் அல்ல. மனிதர் தான். கார்பரேட் சாமியார் என்பது மேலோட்டமான மதிப்பீடு. சிறைகைதிகள் பல்லாயிரம் பேர்களுக்கு இலவசமாக யோகப்பயிற்சி அளிக்கும் அவரின் முயற்சிகளும், மரம் நடும் முயற்சிகளும் பாராட்டபட வேண்டியவை.
(அல்லது நிறுத்தப்பட வேண்டிய தவறுகளா ?)

சேகுவார பற்றிய அவரின் கருத்தை வரவேற்க்கிறேன்.
வன்முறை, அழித்தொழிப்பு மூலம் புரட்சி செய்து, சமூக மாற்றத்தை கொண்ட வர விழைந்தவர் சே.
ஆனால் அதன் விளைவை பார்த்தோமே. இன்று, சேவின் கூட்டாளியும், குருவுமான ஃபிடல் கேஸ்ட்ரோவையும், அவரின் ஆட்சியையும் பற்றிய சரியான மதிப்பீடு என்ன ? சே உயிரோடு இருந்திருந்தால், ஃபிடல் போலவே நம்பகத்தன்மையை இழந்திருப்பார். சிறு வயதில் கொல்லப்பட்டதால் ஹீரோ இமேஜ் உருவானது.

லட்சியவாதத்தை செயலாக்கும் முறைகள் பற்றிதான் ஜக்கி சொல்லியிருக்கிறார். means matters more than ends. கொலை செய்வதை சே நியாயப்படுத்தினார். அதானால் தான் இந்த நிராகரிப்பு. உடனே, முதலாளித்துவ பயங்கரவத கொலைகள் பற்றி முழங்க வேண்டாம். அவையும் ஃபாசிசமே.

மேலும்..

K.R.அதியமான் சொன்னது…

நண்பர் சுந்தர்ராஜன் அவர்களே,

மனித உரிமைகளை பேண, உங்களை போன்றவர்கள் ஆற்றும் பணிகளுக்காக, எம் பாராட்டுதல்களும், வாழ்த்துக்களும். வணங்குகிறேன்.
மனித உரிமைகள் தாம் மிக மிக மிக முக்கியமானவை. இதில் மாற்றுகருத்துக்கள் இருக்க முடியாது.

சேகுவாரா போன்ற ‘போராளிகள்’ மனித உரிமைகளை மீறுவது பற்றி என்ன கருதுகிறீர்கள் ?
லட்சியத்திற்காக, கொள்கைக்காக கொலைகள், அழித்தொழிப்புகள் செய்யலாமா ?

இது பற்றிய எமது பழைய பதிவு :

http://athiyaman.blogspot.com/2008/10/holiest-of-all-holies.html

சுந்தரராஜன் சொன்னது…

திரு கே ஆர் அதியமான் அவர்களுக்கு,

பதிவின் மையத்தை திசை திருப்புவதையே முழுநேர வேலையாக கொண்டு இயங்கும் உங்களை பற்றி எனக்கு தெரியும்.

என்னைப் பற்றி உங்களுக்கும் தெரியும்.

உங்களுடன் விவாதிப்பதைவிட முக்கியமான பல வேலைகள் இருக்கிறது.

நம் இருவரது நேரத்தையும் வீணடிக்க வேண்டாம்.

K.R.அதியமான் சொன்னது…

சேகுவாரா மற்றும் ஜக்கி பற்றிதான் தலைப்பே இட்டிருக்கிறீர்கள். அவர்களை பற்றிய எம் கருத்துக்களை சொன்னேன். பதில் சொல்ல தெரியாமல் நல்லா சமாளிக்கிறீர்கள்.
பரவாயில்லை. நேரத்தை விரையம் செய்ய வேண்டாம் தான்.

விவாதத்தை திசை திருப்ப முனையவில்லை. மன்னிக்கவும்.

நந்தா சொன்னது…

நல்லதோர் இடுகை நண்பரே. மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காகத்தான் இந்த விழாவுக்கும் நான் செல்ல வில்லை. ஒரு வேளை சென்றிருந்தால் ரௌத்ரமும், வருத்தமுமாய் திரும்பியிருப்பேன். விரிவான கட்டுரைக்கு நன்றிகள் பல.

அங்கே மேடையிலிருந்தவர்கள் ஒருத்தரும் இதற்கு வாய் திறக்க வில்லை என்பது இன்னும் அதிக கோபம் கொள்ள வைக்கிறது.

மதி.இண்டியா சொன்னது…

சேகுவாரே கூபாவில் தவிர எங்காவது ஜெயித்தாரா ?

சேகுவாரா வழியில் போன புலிகளின் நிலை என்ன ?

அகிம்சை காலம் தாழ்த்தியாவது ஜெயிக்கும் , நீங்கள் துப்பாக்கி எடுத்தால் எதிரி பீரங்கி கொண்டு தாக்குவான் ,

உங்களை அழிக்க நீங்கள் தரும் லைசன்ஸ்தான் வன்முறை ,

வன்முறை ஆராதனை செய்பவர்களுக்கிடையில் வந்து தைரியமாக பேசிய ஜக்கி வாழ்க

Unknown சொன்னது…

Do anyone knows the fate of Viji, the then wife of Juggi. A case has been filled against him in the 90's I hope. But now he interprets that she lost her human life during the instalation of the Lingam. Will Vijay TV probe into that for Kuttram Nadandhadu enna????????......

முரளிகண்ணன் சொன்னது…

\\நல்ல செயல்களை செய்வதற்கு நல்ல எண்ணங்கள் மட்டும் போதாது என்பது புரிந்தது. \\

100% true

Unknown சொன்னது…

Juggy Oru brand name avalave. Avan solluvadhellam poruttaga edukkalaagadhu Thozhare. Ethanayo edugalil avan solla evano uzhudugiraan. Avanukku kaagave Kaattu Poo endroru edu.Ulagil endha oruvarukkum prachanai illaamal illai, andha pirachanai thaan ivanai pondra samiyargalai vaazha vaikirdhu. Kaasukkozhupedutha panakkaara naykallukku pirachannai miga adhigam, agave avargallukke udayavan indha Corporate Samy. Paavam avan than adivarudigalluke visuvaasamaga irrukiran. Avan karuthil avan thelivu. Juggyin adivarudigal, adiyaatkal engum ethilum niraidhu irukkindranar, nam vattathilum kooda, avargal than pongi ezhukindranar.

மோகனரூபன் சொன்னது…

மோகனரூபன் எழுதுவது,
இனிய நண்பர் சுந்தரராஜன் அவர்களே. தங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். சிறப்பாக இருக்கின்றன. வாழ்த்துகள். ஜட்டி வாசுதேவை நாம் அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
‘சே, கூபாவைத் தவிர வேறு எங்கே வெற்றி பெறார்?’ என்று கேட்டிருக்கிறார் ஒருவர். (இவர் கியூபா என்று சொல்ல மாட்டாராக்கும்.) உலகம் தழுவிய அளவில் அனைத்து நாட்டு புரட்சிகர இளைஞர்களாலும் அன்பின் ஆவேசத்துடன் சே சுவீகரிக்கப்பட்டிருப்பதே அவரது வெற்றி.
ஆயுதப் போராட்டம் நல்லதல்ல என்கிறார்கள் சிலர். இரண்டாம் உலகப் போரில¢ ஹிட்லருக்கு எதிராக என்னத்த போரிட்டு என்று நினைத்து யாரும் போரிடாமல் இருக்கவில்லையே? போரில் மக்கள் அழிவார்கள் என்று அன்று அமெரிக்காவும், ரஷ்யாவும் கருதியிருந்தால் இன்று நாமெல்லாம் ஜெர்மன் மொழியில் பேசிக் கொண்டிருந்திருப்போம்.
நாம் துப்பாக்கித் தூக்கினால் எதிரி பீரங்கி கொண்டு வருவான் என்பது ஏற்கெனவே அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம் போன்றவர்கள் சொன்னது. இப்போது சொல்பவர் ஒருவேளை அமிர்தலிங்கத்தின் உறவுக்காரரோ என்னவோ?
பீரங்கி வைத்திருப்பவனுக்கு எதிராக துப்பாக்கி வைத்திருப்பவர்கள் தும்மக் கூடாது என்பது ஒருவகை திமிர்த்தனம். அன்று துப்பாக்கித் தூக்கியவன்தான் இன்று பீரங்கி வைத்திருக்கிறான். பீரங்கி வைத்திருப்பவர்களாக நாமும் மாற வேண்டும் என்ற புத்தி ஏன் வர மறுக்கிறது-?
உங்கள் எழுத்துகளுக்கு மீண்டும் என் வாழ்த்துகள். எந்த சலசலப்புக்கும் அஞ்சாமல் எழுதுங்கள் நீங்கள் தொடர்ந்து....
அன்புடன் மோகனரூபன்.

K.R.அதியமான் சொன்னது…

மோகனரூபன்,

தேசிய ராணுவம் தற்காப்பிற்காக மட்டும் தேவை படுகிறது. இதுவும் விவாததிற்க்குரியதுதான். குழப்பிக்கொள்ள வேண்டாம்.

சேவின் வழிதோன்றலகள் தாம் இந்திய மாவோயிஸ்டுகள். குறிக்கோள்கள், வழிமுறைகள் எல்லாம் ஒன்றுதான். உண்மையில் சேகுவாரவை ‘வழிபடுவர்கள்’ இணையத்தில் ’மட்டும்’ முழங்காமல், மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து ’செயலில்’ காட்ட வேண்டும். அதுதான் நேர்மையான வழி..

மோகனரூபன் சொன்னது…

மதி இண்டியனுக்குத்தானே நான் மறைமுகமாக நான் பதில் சொன்னேன். இடையில் ஒரு முந்திரிக¢கொட்டை வந்து ஏன் மூக்கை நீட்டுகிறது? புரியவில்லை.
மிஸ்டர் அதியமான் (அதிகமான்?) தேசிய ராணுவம் தற்காப்புக்கு மட்டுமே தேவைப்படுகிறது என்ற உங்கள் கண்டுபிடிப்புக்கு என் வாழ்த்துகள். எத்தனை நாடுகளில் அது காடையர் கூட்டமாக, ரவுடி ராணுவமாக இருக்கிறது என்பது உலகிற்கே தெரியும். ‘இறையாண்மை’ என்ற எழவெடுத்த ஒன்று இருப்பதால் சீருடை தரித்தவர்களுக்கு எல்லாம் இங்கே செம்மல்கள் பட்டம் கொடுத்து விட முடியாது.
அது போகட்டும். தேசிய ராணுவம் தற்காப்புக்கு மட்டுமே தேவைப்படுகிறது என்றுகூறிவிட்டு இதுவும் விவாதத்திற்குரியதுதான் என்கிறீர்கள். ஒரு விஷயத்திலும் நீங்கள் உறுதியாக இருக்க மாட்டீர்களா?
எர்னஸ்டே சே கெவாராவை இங்கே யாரும் வழிபடவில்லை. (சே எப்போது சிறு தெய்வமானார் அவரை வழிபட?அப்படியரு வழிபாட்டை சேவே விரும்பமாட்டார்).
மாவோயிஸ்ட்கள் சே வழிநடக்கிறார்கள் என்று நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. எப்படி? சீனா இப்போது கம்யூனிச வழியில் நடக்கிறதே அதைப்போலா? அப்புறம் ஒன்று. இணையத்தில் நான் இதுவரை எதுவும் முழங்கியதாக நினைவும் இல்லை. தவிர எது ‘நேர்மை’ என்பது எனக்கு மிக நன்றாகவே தெரியும்.
கடைசியாக ஒன்று. இது நண்பர் சுந்தரராஜன் அவர்களின் இடம். இங்கே வாதவிவாதம் நடத்துவதை நான் விரும்பவில்லை. அவரவர் அவரவர் கருத்தைத் தெரிவிப்பது மட்டுமே அனைவருக்கும் நல்லது.
மோகனரூபன்.

www.bogy.in சொன்னது…

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

செங்கதிரோன் சொன்னது…

சார் கலக்கறீங்க ..ஒவ்வொரு பதிவும் அருமை...

shajudeen சொன்னது…

anna...

i have been searching from yesterday the quote mr.jakki told as che said "if you are in rage, you are one of us" - i cant find it.
the closest one was “If you tremble indignation at every injustice then you are a comrade of mine.” ERNESTO CHE GUEVARA.

we should ask Mr.Jakki where he read the quote.
if he cannot understand the difference between rage and indignation..

we should teach him... i am indignated by the talk of jakki

shajudeen
vazhneriarasu@gmail.com
coimbatore

பெயரில்லா சொன்னது…

பெரியார் கடவுள் மறுப்பு மட்டுமே செய்தார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய மடத்தனமோ அதைவிடவும் பெரிய மடத்தனம் அவரது கடவுள் மறுப்பை மட்டும் விட்டுவிட்டு பிற கொள்கைகளை ஆதரிக்கிறோம் என்று சொல்வதும். வசதியாக சில ஆன்மீகவாதிகள் இவ்வாறு சொல்வதுண்டு. நாம் அவ்வாறு அல்லாமல் பெரியாரை முழுதும் தொழுகிறோம். கடவுளுக்கே நாம் அவ்வளவுதான் மதிப்புத் தருகிறோம் எனும் போது இந்த ஆன்மீகவாதிகளுக்கு என்ன மரியாதை தரப்போகிறோம் என்பது உங்களுக்குத் தெரியாதா? ஆன்மீகப்போர்வையிலே மக்களின் அறியாமையை போற்றிப் பாதுகாத்து தன்னம்பிக்கையை துளிர்விடாது செய்யும் அயோக்கியத்தனத்தையே பலரும் செய்துவரும் வேளையில் எப்போதாவது அரிதாக சில மனிதர்களையும் நாம் பார்க்க நேர்கிறது.

திரு. ஜக்கி வாசுதேவையும் நான் அவ்வாறே காண்கிறேன். அவரின் அழகழகான கருத்துக்களை ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற விகடன் வெளியீட்டுப்புத்தகத்தில் காணலாம். அவர் ஆய்ந்தறிந்த ஈஷா யோகா கலையைப்பற்றிய ஒரு விளம்பர சிடி இப்போது எல்லா பிரபல புத்தகக்கடைகளிலும் விகடன் மற்றும் நய்ஹா உபயத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.

துள்ளலான இசையோடும் கவிதைத்தனமான காட்சிகளோடும் ஆரம்பிக்கும் அந்த சிடியில் ஆரம்பக்காட்சிகள் நிறைவடைந்து ஜக்கியின் பேட்டி துவங்குகிறது.. ‘தனியொரு மனிதன்’ என்பதை ‘ப்ரத்யொரு மனிதன்’ என்றும் ‘தொழில்நுட்பம்’ என்பதை தொழிர்நுற்பம்’ என்றும் கூறும் அவரது கொஞ்சும் தமிழ் நம்மை கவர்கிறது. அற்புதமான மயக்கும் குரலில்,

ஜனனம் சகதம்..
மரணம் கருணம்..

என்ற ஸ்லோகத்தோடு (எனக்குப் புரியவில்லை) துவங்கி பேட்டியை இவ்வாறு ஆரம்பிக்கிறார்,

“ நாம் எப்போ ஒரு மனிதனா பிறந்தோம்.. அப்பவே நமக்கு ஒரு பிரச்சினை வந்துடுச்சு.. நாம மற்ற ம்ருகங்கள் மாதி வந்திருந்தா நமக்கு சாப்பாடு, இனப்பெருக்க செயலு இது ரெண்டு நடந்தா வாழ்க்கை முடிஞ்ச மாதிரி இருக்கும். எப்போ மனிதனா வந்துட்டோமோ ஒரு பிரச்சினை.. வயிறு. வயிறு காலியா இருந்தா.. சாப்பாடு. வயிறு புல்லாயிருச்சுன்னா.. நூறு பிரச்சினை.. நமக்கு.! ”

முதல் முறையாக கேட்கும்போது களுக்கென சிரித்துவிட்டேன். எவ்வளவு எளிமையான வரிகள். தொடர்ந்து ஆனந்தத்தேடல் குறித்தும், ஈஷா யோகா குறித்தும் சில விளக்கங்கள் தருகிறார். கடவுள் நம்பிக்கையை அவர் கொண்டிருந்தாலும், அல்லாதோரையும் வற்புறுத்தாமல் அரவணைத்துச்செல்வதை இவரது சிறப்பாக நான் காண்கிறேன். கட்டுக்கள் இல்லாத ரசனைகள் நிரம்பிய இயல்பான சிந்தனாவாதியாக இருக்கிறார். உடலைப்புரிந்துகொள்வதை முன்நிறுத்துகிறார். யோகாவைப்பற்றிய இவரது கருத்துக்கள் சிந்திக்க வைக்கின்றன. ஜக்கி வாசுதேவைப் புகழ்வது இந்தப்பதிவின் நோக்கமல்ல என்றாலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களைக்கொண்ட ஆன்மீகவாதிகள் அனைவருமே இவரைப்போலவே தெளிந்த சிந்தனையோடு இருக்கக்கூடாதா.. என்ற ஏக்கம் எழவே செய்கிறது.

பி.கு : அந்த சிடியில் இடையிடையே நய்ஹாவின் புண்ணியத்தில் டிவியில் நாம் பார்த்திராத ‘பெண்மையைப்போற்றுவோம்’ விளம்பரங்கள் வருகின்றன. அனைத்திலும் விதவிதமான வசனங்களோடு திரு. சாலமன் பாப்பையா நம்மை மயக்குகிறார்.

“ ஒருவரோட வலிய இன்னொருவர் உணர முடியுமா..
ஒருத்தரோட பசிய இன்னொருத்தர் புரிஞ்சுக்க முடியுமா..
முடியுதே..
ஒருத்தரால முடியுதே.. யாரு.. யாரு? அம்மா.!
குழந்த வலியில அழுவுதா, பசியில அழுவுதான்னு தாய்க்கு மட்டுந்தானேய்யா தெரியுது. அந்த ஒடம்புக்கு ஏதாவது ஒண்ணுன்னா இவ ஒடம்பு பதறுதே.. குழந்தைக்கு பசிச்சா.. இவ நெஞ்சுல பாலூறுதே.! விந்தைய்யா..விந்தை. இந்த அபூர்வ பெண்மணிய தினமும் வணங்கணும்யா.. ”

என்று அவர் கம்பீரமாக கூறும் போது ஆமா.. ஆமா.. என்று சொல்லத்தோன்றுகிறது.

“சொல்லச்சொல்ல இனிக்கிற சொல் அம்மா.
ஒரு சொல்லுக்குத்தான் எத்தனை பரிணாமம்.
இது இயற்கையின் ஒலி.
நினைச்சா தியானம்.
உச்சரிச்சா மந்திரம்.
அந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சாடனம் செய்வோம்.
அம்மாவை கையெடுத்து வணங்குவோம்”
இன்றைய பெரியார் - ஜக்கி

கருத்துரையிடுக