10 மார்ச், 2010

நித்தியானந்தன் - ரஞ்சிதா ஆபாசக் காட்சிகள்: சட்டம் என்ன சொல்கிறது?


திருவண்ணாமலை ராஜசேகர் என்ற நித்தியானந்தனும், ரஞ்சிதா என்ற திரைப்பட நடிகையும் பங்கேற்ற காட்சித் தொகுப்புகள் பலதரப்பிலும் பலத்த பரபரப்பை ஏற்படுத்தினாலும் முக்கியமான சில பார்வைகள் தவறிப்போயின.

அந்தக்காட்சியில் இடம் பெற்றவர்கள்மீது நடவடிக்கை எடுக்கக்கோரும் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஆனால் வயது வந்த இருவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சட்டம் யாருக்கும் வழங்கவில்லை என்பதை பலரும் உணரவில்லை.

ஆபாசம் நிறைந்த அந்தக் காட்சிகளை தமிழ்நாட்டில் வசிக்கும் அனைவருடைய வீட்டிற்கும் அனுப்பிய ஊடகங்கள் குறித்து தேவையான அளவில் விவாதங்கள் நடைபெறவில்லை. இளவயதுடையோர் உள்ளிட்ட பார்வையாளர்களின் மனதை பாதிக்கக்கூடிய அந்த காட்சிகளை ஒலி-ஒளிபரப்புவதற்கு சட்டம் அனுமதிக்கிறதா? என்ற கேள்வி பரவலாக விவாதிக்கப்படவில்லை.


தற்போது, காலம் கடந்தேனும் இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒருவர் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிகிறது. அந்த வழக்கின் விவரங்கள் முழுமையாக தெரியவில்லை.

எனினும், இந்த விவரம் குறித்து சில சட்டப்பார்வைகளை பரிசீலிப்போம்.

இந்திய தண்டனைச் சட்ட(Indian Penal Code)த்தின் பிரிவு 292 என்ன சொல்கிறதென்று பார்ப்போம்:
ஆபாச புத்தகம், துண்டு வெளியீடு, தாள், சித்திரம், ஓவியம், உருவமைப்பு அல்லது உருவம், அல்லது வேறு ஆபாசப்பொருள் எதையாகிலும் விற்கிற, வாடகைக்கு விடுகிற, விநியோகம் செய்கிற பொதுமக்களுக்குக்க காட்சியாக வைக்கிற, அல்லது வேறெந்த முறையிலேனும் புழக்கத்திற்கு விடுகிற, அல்லது விற்பனை, வாடகை, விநியோகம், பொதுக்காட்சி, அல்லது புழக்கத்தின் பொருட்டுச் செய்கிற ...
...எந்தச் செய்கையையும் செய்கின்ற, செய்ய முனைகின்ற எவருக்கும் மூன்றுமாதங்கள் வரை சிறைக்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமோ தண்டனையாக விதிக்கப்படும்.

இ.த.ச. பிரிவு 509ன் படி:

ஒரு பெண்ணின் கண்ணியத்தை குலைக்கும் விதத்தில் பேசுபவர்களை, ஒலி எழுப்புபவர்களை, சைகை செய்பவர்களை, அல்லது ஏதேனும் பொருளை காட்டுபவர்களை பெண்களின் அந்தரங்கத்துக்குள் அத்துமீறி பிரவேசிப்பவர்களை ஓராண்டு சிறைத்தண்டனைக்கோ அல்லது அபராதத்திற்கோ அல்லது இவை இரண்டுக்குமோ ஆட்படுத்தலாம்.

பெண்களை அநாகரீகமாக சித்தரித்தல் (தடைசெய்யும்) சட்டம், 1986 (Indecent Representation of Women (Prohibition) Act, 1986) பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றின்கீழ், ஒரு பெண்ணை உடல்ரீதியாகவோ, வேறு ரீதியாகவோ கண்ணியக்குறைவாக சித்தரிக்கும் காட்சிகள் உள்ளிட்ட எதையும், அந்த பெண்ணை சிறுமைப்படுத்தும் நோக்கில் வெளியிடுவோருக்கு அவர் அக்குற்றத்தை முதல் தடவையாக செய்தால் இரண்டு ஆண்டுகளும், மறுமுறையும் அதே குற்றத்தில் அவர் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், கூடுதலாக இரண்டாயிரம் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கலாம்.

தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 (Information Technology Act, 2000) -இன் பிரிவு 67 இவ்வாறு கூறுகிறது:

பாலுறவு தொடர்பான காட்சிகளை எலக்ட்ரானிக் வடிவத்தில் வெளியிடுவோரை முதல் தடவை தண்டிக்கும்போது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மறுமுறை இதே தவறை மீண்டும் செய்தால் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இவற்றோடு இரண்டு லட்ச ரூபாய்வரை அபராதமும் விதிக்கலாம்.

பொதுவாக (தமிழ்) கலாச்சாரத்தின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் பெண்களையும் அதிலும் குறிப்பாக தமிழரல்லாத பெண்களையும், பிற மொழியினரையுமே குறிவைத்து தம் அரசியலை நிர்ணயிக்கின்றனர். ஆனால் தமிழ் மக்களின் அறம் சார்ந்த உளவியலுக்கு பெரும் ஆபத்து விளைவிக்கும் பணியில் தமிழர்களே முக்கிய பங்கு வகிக்கின்றனர். இப்போது அவர்களை ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதற்கு தேவையான சட்டப்பிரிவுகளும் குறித்து தரப்பட்டுள்ளது!

கலாச்சாரக் காவலர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?


(கார்ட்டூன்: நன்றி - தினமணி)

31 கருத்துகள்:

Sivamjothi சொன்னது…

SUN TV has enough money and power to make this nothing.

Now its time to think who gave power/money to them....

பெயரில்லா சொன்னது…

well said Balu

Athisha சொன்னது…

அடேங்கப்பா நீங்க சொல்றத பார்த்தா கலாநிதி மாறன உள்ள வச்சு கும்மாங்குத்து குத்தலாம் போலருக்கே! இருந்தாலும்

என்ன செய்ய..நாம தமிழ்நாட்டுலல இருக்கோம்?

பெயரில்லா சொன்னது…

இந்த பதிவு எழுதியவர், படிப்பவர்கள், கமென்ட் போடுபவர்கள் ஆகிய அனைவர் வீட்டுக்கும் ஆட்டோ வருதாம்.

A working journalist... சொன்னது…

ஊடகத்தில் பணிபுரிந்த - அதன் செயல்படுதன்மையை அறிந்த நீங்கள் ஊடகங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக அந்த ஊடகங்கள் மக்களை எவ்வாறு மூளைச்சலவை செய்கின்றன என்பதையும் அம்பலப்படுத்த வேண்டும்.

செய்வீர்கள் என்று நம்புகிறேன்.

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி பாலு, அதிஷா, பெயரில்லா நண்பர்கள் மற்றும் A Working Journalist...

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கும், உனக்கெதற்கு இந்த வேலை என்று அன்புடன் எச்சரித்த பேரன்பர்களுக்கும் நன்றி.

ஊடக விமர்சனம் என்பது காலத்தின் கட்டாயம் என்றே புரிந்து கொள்கிறேன்.

சிந்திக்கும் மூளை கொண்ட மனிதனையே ஒரு பண்டமாக்கி அரசியல் கட்சிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் விற்பனை செய்யும் பணியை ஊடகங்கள் செய்வதாக உறுதியாக நம்புகிறேன்.

எனினும் அதனை திறனாய்வு செய்து விமர்சனம் செய்வது மிக அதிக காலத்தையும், வேலையையும் சார்ந்திருக்கிறது.

அதற்கான நேரமோ, பணித்திறனோ என்னிடம் இல்லை. ஆயினும் இத்துறையில் பணிபுரிவோர் யாராவது இருந்தால் அவர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறேன்.

நன்றி!

Dr.G.சிவராமன் சொன்னது…

கலக்கீட்டீங்க தோழரே! நக்கிரனும் சன் டீவியும் இணைந்து செய்யும் இந்த கேவல வியாபரத்திற்கு சட்டமும்,அதன் பாதுகவலர்களும் என்ன சொல்லப்போகிறார்கள்/பார்க்கலாம்

ஜெ.ஜெயமார்த்தாண்டன் சொன்னது…

பதிவுக்கு நன்றி .
அரசு இவர்கள் மேல் தன்னிசசையாக நடவடிக்கை எடுக்க முடியாதா? யாரேனும் புகார் அளித்தால் தான் அரசு இயங்கமுடியுமா? ( அப்படியே இயங்க சட்டத்தில் வழி இருந்தாலும் "பேரன்"கள் மீது அது இயங்காது அது வேறு விசயம்)


நேரம் கிடைக்கும் பொழுது இந்த பதிவை பாருங்கள்
http://marthandanj.blogspot.com/2010/03/blog-post_03.html

Osai Chella சொன்னது…

இதைத்தானே நானும் சொன்னேன் தோழர். அப்புறம் ஒன்னும் சொல்லனும்.. ஒரு ப்ளாக் மெயிலருக்கு உதவினால் சட்டப்படி ஏதாவது செக்சன் இருக்கான்னு பாருங்க! இவங்க சுன் தொலைக்காட்சி மாதிரி இரு சீப் மீடியா பாசிஸ்ட் இந்தியவிலேயே இல்லை என்பது என் தாழ்மையான எண்ணம்! நல்ல கட்டுரை!

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி Dr சிவராமன், ஜெ.ஜெயமார்த்தாண்டன்

-அரசு இவர்கள் மேல் தன்னிசசையாக நடவடிக்கை எடுக்க முடியாதா? -

முடியும்.

=யாரேனும் புகார் அளித்தால் தான் அரசு இயங்கமுடியுமா?-

தேவையில்லை!

( அப்படியே இயங்க சட்டத்தில் வழி இருந்தாலும் "பேரன்"கள் மீது அது இயங்காது அது வேறு விசயம்)

??? !!! :):):)


-நேரம் கிடைக்கும் பொழுது இந்த பதிவை பாருங்கள்
http://marthandanj.blogspot.com/2010/03/blog-post_03.html-

படித்தேன். செறிவான கருத்துகள்.

vinu சொன்னது…

Really wonderful article,i am agree with you , what sun TV did is arrogant,they forced my family to watch Blue film.

பெயரில்லா சொன்னது…

ivanugala nalla pinju pona serupulaye adikanum

குழலி / Kuzhali சொன்னது…

உங்களிடம் கேட்கனுமென்று இருந்தேன், நித்தியானந்தர் ரஞ்சிதா வாய்வழி புணர்ச்சியில் ஈடுபட்டது படத்தில் உள்ளது இது இ.பி.கோ. செக்சன் 377A வின் கீழ் முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் என்பதில் சட்டரீதியாக தவறு செய்துள்ளார் என்பது உண்மையா?

பெயரில்லா சொன்னது…

தாத்தா இலவச டிவி கொடுத்ததே, மக்கள் இதையெல்லாம் பார்த்து அறிவை வளர்த்துக்கோனுமின்னுதான்.

வெறும் மானாட, மயிலாட பார்த்தால் நம்மவூட்டு அம்மினிங்களுக்கு முழுசா பிரியாமப்போயிடும்னு பேரனுங்க இத்த காமிச்சாங்க.

பார்த்துனு போய்க்கினே இருப்பியா.

அனிதா சொன்னது…

//குழலி / Kuzhali சொன்னது…
உங்களிடம் கேட்கனுமென்று இருந்தேன், நித்தியானந்தர் ரஞ்சிதா வாய்வழி புணர்ச்சியில் ஈடுபட்டது படத்தில் உள்ளது இது இ.பி.கோ. செக்சன் 377A வின் கீழ் முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் என்பதில் சட்டரீதியாக தவறு செய்துள்ளார் என்பது உண்மையா?//

சட்டத்தில் முறையான பாலியல் நடவடிக்கைகள் என்றோ, முறையற்ற நடவடிக்கைகள் என்றோ எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்றே நினைக்கிறேன். பொதுக்கருத்துக்கு எதிரானதாகவோ, யாருக்கேனும் இன்னல் விளைவிப்பதாகவோ இருந்தால் அதை முறையற்ற பாலியல் நடவடிக்கை எனலாம். இந்த சம்பவத்தில் இருவரும் ஒற்றுமையுடன் செய்வதை முறையற்ற செயலாக கருதமுடியாது என்றே நினைக்கிறேன்.

வலைபதிவரின் கருத்தை நானும் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்.

பெயரில்லா சொன்னது…

//குழலி / Kuzhali சொன்னது…
உங்களிடம் கேட்கனுமென்று இருந்தேன், நித்தியானந்தர் ரஞ்சிதா வாய்வழி புணர்ச்சியில் ஈடுபட்டது படத்தில் உள்ளது இது இ.பி.கோ. செக்சன் 377A வின் கீழ் முறையற்ற பாலியல் நடவடிக்கைகள் என்பதில் சட்டரீதியாக தவறு செய்துள்ளார் என்பது உண்மையா?//

Delhi High Court recently struck down the Sec.377 of I.P.C. Am I right?

purushothaman.p சொன்னது…

//Delhi High Court recently struck down the Sec.377 of I.P.C. Am I right?
//
அது இந்த பிரிவுக்கு எதிரான ஒரு முற்போக்கு தீர்ப்பு ஆனால் இன்னும் நாடாளுமன்றத்தில் சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றே நினைக்கிறேன்...

பெயரில்லா சொன்னது…

Why don't you file a criminal case against the culprits on your own? Is it illegal?

Asadha சொன்னது…

நல்ல பதிவு....

TRUE TAMILAN சொன்னது…

// வயது வந்த இருவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சட்டம் யாருக்கும் வழங்கவில்லை என்பதை பலரும் உணரவில்லை.//

They are not ordinary persons. They are influencing the society in one way or another. And it is not a legal issue. But its something about the ethical and moral values.

//பொதுவாக (தமிழ்) கலாச்சாரத்தின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் பெண்களையும் அதிலும் குறிப்பாக தமிழரல்லாத பெண்களையும், பிற மொழியினரையுமே குறிவைத்து தம் அரசியலை நிர்ணயிக்கின்றனர்.//

Yes it is the duty of the true tamilans to fight against evil issues done by the non-tamil people. I think you are not a Tamilian. Thats-why you are supporting the Anti-Tamils.

பெயரில்லா சொன்னது…

சட்டமே அவுங்க கைலதானே இருக்கு. அவங்கன்னா சன் டிவி நக்கீரன் போன்றவங்க அப்புறம் சட்டத்த வைச்சு என்ன பண்றது? ஆட்சியில இருக்கிறவங்க நண்பன் தான் சட்டம். நீதி மன்றத்தையே விலைக்கு வாங்கி வாடகைக்கு விடுவாங்க. பவர் இல்லாதவங்க உரிமை கொண்டாட முடியாது.

விகடகவி சொன்னது…

TRUE TAMILAN சொன்னது…
// வயது வந்த இருவரது சொந்த வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் அதிகாரத்தை சட்டம் யாருக்கும் வழங்கவில்லை என்பதை பலரும் உணரவில்லை.//

They are not ordinary persons. They are influencing the society in one way or another. And it is not a legal issue. But its something about the ethical and moral values.

//பொதுவாக (தமிழ்) கலாச்சாரத்தின் காவலர்களாக தங்களை கருதிக்கொள்பவர்கள் பெண்களையும் அதிலும் குறிப்பாக தமிழரல்லாத பெண்களையும், பிற மொழியினரையுமே குறிவைத்து தம் அரசியலை நிர்ணயிக்கின்றனர்.//

Yes it is the duty of the true tamilans to fight against evil issues done by the non-tamil people. I think you are not a Tamilian. Thats-why you are supporting the Anti-Tamils.

-----

நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சாதாரண மனிதர்களே. சாமியார்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்தது மக்களின் குற்றமே. அதற்கு துணை போனது ஊடகங்கள் என்பதை மறக்க முடியாது. அறநெறிகளும், கோட்பாடுகளும் நபருக்கு நபர், நேரத்துக்கு நேரம் மாறுபடலாம். எனவே சட்டத்தின் பார்வையில் இவற்றை பார்ப்பது தவிர்க்கமுடியாது.

தமிழ்க்கலாசாரம், பண்பாடு என்று கூறிக்கொண்டு வேற்று மொழியினரை மிரட்டுவதையும், மிக அதிக அளவில் தமிழினத்தை சீரழிக்கும் தமிழர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதும்தான் தமிழ் கலாசாரமா என்றே இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

இதற்காக பதிவர் தமிழர்தானா என்ற ஆய்வுகள் தேவையில்லாதவை. இந்த கேள்விகளை எழுப்பும் உண்மையான தமிழன் கேள்விகளைக்கூட ஆங்கிலத்தில் எழுப்பியுள்ளார்.

சீ.பிரபாகரன் சொன்னது…

வணக்கம் தோழர்.

மிகச்சிறந்த பதிவு. நித்யானந்தா பலியல் விவகாரத்தில் நித்யானந்தாவின் செயல்பாடுகள் மட்டுமே அனைத்துத் தரப்பிலும் குற்றமாக பார்க்கப்படுகிறது.

சன்குழுமமும் நக்கீரனும் செய்யும் ஊடக அத்துமீறல்களை அரசு உட்பட யாரும் கண்டுகொள்ளவில்லை. இது பற்றி நானும்பல தோழர்களுடன் விவாதித்துள்ளேன். பெரும்பாலானோர் இந்த ஆபாச ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே வலியுறுத்தினர்.

ஆனால், அவர்களுடன் யார் மோதுவது?

பெயரில்லா சொன்னது…

yes, அவர்களுடன் யார் மோதுவது?

Unknown சொன்னது…

//நித்யானந்தாவும், ரஞ்சிதாவும் சாதாரண மனிதர்களே. சாமியார்கள் மீது அபரிமிதமான நம்பிக்கை வைத்தது மக்களின் குற்றமே//

நல்ல நகைச்சுவை.

10000 த்துக்கும் அதிகமான பக்த கோடிகள்: அவர்கள் அனைவரும் பாமரர்கள் அல்ல. மெத்த படித்து பெரும் பதவிகளில் இருப்பவர்க்ள். உலகம் முழுவதும் 33 நாடுகளில் ஆசிரமக்கிளைகள். 200 ஏக்கர் நிலத்தில் பெங்களூரில் ஆசிரமம். பல்கோடி வருமானம்.உலமெங்கும் சென்று பக்தர்களுக்கு உபதேசம். அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், முதலமைச்சர்கள் (மோடி) பொதுமேடையில் பாராட்டு விழாக்கள்.

இவர் ஒரு சாதாரண மனிதர் விகடகவிக்கு.

திரைப்படங்கள். கோடிக்கணக்கில் வருமானம். தமிழ், தெலுங்கு, மலையாளம் என பலகோடி மக்கள் வாழும் நாலு தென்மானிலங்களில் நன்கு தெரிந்தவர். பெரும்புள்ளிகள் தொடர்பு.

இவர் ஒரு சாதாரணமானவர் விகடகவிக்கு.

Unknown சொன்னது…

நிதிக்கம்பெனி தொடங்கி கோடிகளைச்சுருட்டிக்கொண்டு ஓடுவிடுகிறான்.

நாம் சொல்லலாம்: இத அவன் தப்பில்லை. மக்கள் தப்பு.

Unknown சொன்னது…

திரைப்படப்பாடல்களில் இல்லாத் ஆபாசமா? மேலே விழுந்து புரளுகிறார்கள்; பிசைகிறார்கள். பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் என படப்பாடல்கள். அவைகளை சென்னையிலே கண்டுகளிக்கலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் வருகிறது.

எவ்வளவு காலமாக? வெகு காலமாக!

அதைக்கண்டு சிறார்கள் கெடுவதில்லையாம்.

அதைக்கண்டு சட்டம் என்ன சொல்கிறது என்று கேள்வி எழாதாம்.

ராஜசேகரன் - ரஞ்சிதா காட்சிகளைக்கண்டவுடந்தான் சட்டம் என்ன சொல்கிறது என்று ஆராய்வாராம்/

Everything is motivated.

I dont say you should not question. But why you do it selectively?

பெயரில்லா சொன்னது…

new template is good.

பெயரில்லா சொன்னது…

அடடே!

பெயரில்லா சொன்னது…

Adhu Sari

பெயரில்லா சொன்னது…

மிகவும் நல்ல பதிவு,
ஆனால் இந்திய நாட்டின் சட்ட புத்தகம் மதவாதிகளிடம் இருக்கும் வேதங்களை போலவே இன்றும் உள்ளது.அவை சட்ட நூலாக உள்ளதே தவிர,பின்பற்றப்படுவதில்லை நீதிமன்ற தீர்ப்புகள் பெரும்பாலும் நம்பிக்கை அடிப்படையிலும்,வழக்கு சம்மந்தப்பட்டவர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையிலுமே அளிக்கப்படுகின்றன ஆதாரங்களினடிப்டையில் அமைவதில்லை.

கருத்துரையிடுக