இந்தியாவின் அரசியல் சட்டம் கூறும் அம்சங்களுக்கு எதிராக மக்கள் நடந்து கொண்டால் அரசு தண்டிக்கும். அரசே நடந்து கொண்டால்…?
இந்தியா முழுமையும் இது நடந்தாலும், சத்தீஷ்கர், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மண்டிக் கிடக்கும் இயற்கை வளங்களை உள்நாட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்ப்பதில் முனைப்பாக நிற்கும் அரசும், இதனால் பாதிக்கப்படும் மக்களும் நடுத்தர வர்க்கத்தினரின் பார்வைக்கு வருவதே இல்லை. இதற்கான சிறப்பு செயல் திட்டங்களில் அரசு அமைப்புகளும், (பெரும்பாலான) ஊடக நிறுவனங்களும் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றன.
இந்நிலையில் எழுத்தாளர் அருந்ததி ராய், தந்தேவடா பகுதியில் பயணம் செய்து தாம் பார்த்தவற்றை, உணர்ந்தவற்றை அவுட்லுக் (20 மார்ச் 2010) ஆங்கில இதழில் Walking With The Comrades என்ற பெயரில் கட்டுரையாக பதிவு செய்துள்ளார்.
வேதாந்தா, எஸ்ஸார் போன்ற நிறுவனங்களும், அரசு அமைப்புகளும் இந்தியாவின் இயற்கை வளங்களை சூறையாட மேற்கொள்ளும் முயற்சிகள், இதை எதிர்க்கும் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராக “சல்வா ஜூடும்” என்ற ஆயுதப்படையை அரசு-வணிக நிறுவனங்கள் கூட்டாக வளர்த்துவிடும் அபாயம், இதற்கிடையே அப்பகுதி மக்கள் அனுபவிக்கும் அவலம் ஆகிய அனைத்தும் ஒரு இலக்கிய பதிவாக அவுட்லுக் இதழில் வெளியாயின.
இதன் தமிழ் மொழியாக்கம் தற்போது வெளியாகியுள்ளது. மனிதன் பதிப்பகம், விடியல் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ள இந்த நூலில், சல்வா ஜூடும் அமைப்பால் பாதிக்கப்பட்ட காந்தியவாதி ஹிமான்ஷு குமாரின் கட்டுரையும், அருந்ததி ராயின் மற்றொரு கட்டுரையும் கூட இடம் பெற்றுள்ளன.
மாவோயிஸ்ட்களின் பிடியில் சிக்கியுள்ள இடங்களையும், மக்களையும் மீட்பதாக கூறும் அரசு அமைப்புகள் உண்மையில் எதை மீட்க இந்த ஆபரேஷன் கிரீன்ஹன்ட்-டை நடத்துகின்றன என்பது இந்த கட்டுரையில் குறிப்பாக விளக்கப்பட்டுள்ளது.
வன்முறைக்கு வக்காலத்து வாங்காமல் அரசுப்படைகளின் வன்முறைகளையும், அதற்கு மக்களின் – மாவோயிஸ்ட்களின் எதிர்வினைகளையும் முறையாக இந்த கட்டுரை ஆவணப்படுத்துகிறது.
![]() |
(சல்வா ஜூடும் படையினரால் ஒடுக்கப்பட்ட "தீவிரவாதி மாத்வி முகேஷ்" வயது: 2) |
அருந்ததி ராயின் இந்தப் பயணத்திற்கு முன்பொரு சந்தர்ப்பத்தில் சந்தித்த உயர் காவல்துறை அதிகாரி பிரசினையின் ஆணிவேரை (நூலின் 70ம் பக்கத்தில்) மிக அழகாக அலசுகிறார்: “உண்மையாகச் சொன்னால் இந்த சிக்கலைக் காவல்துறை அல்லது படைகளைக் கொண்டு களைய முடியாது. இந்தப் பழங்குடி மக்களுக்கு பேராசை என்றால் என்னவென்றே தெரியாது. அதுதான் சிக்கலுக்கே காரணம்! இந்தப் பழங்குடி மக்கள் பேராசைப் பட்டாலன்றி நமக்கு தீர்வே இல்லை!!”
தற்போதைய பிரச்சினைக்கு அந்த காவல்துறை அதிகாரி கூறும் தீர்வோ வியக்க வைக்கிறது: “படைகளை இங்கிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டு இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு தொலைக்காட்சி பெட்டியை வையுங்கள். எல்லாம் தானாக சரியாகிவிடும்!”
“மக்கள் வாழ்வுரிமைகளை பறிப்பதை, அந்த மக்கள் அறியாமலே செய்வதற்கு சரியான உபகரணம், தொலைக்காட்சி பெட்டிதான். அதுதான் மக்களை மழுங்கடிக்க முழுமையாக பயன்படும்” என்று சத்தீஷ்கர் மாநில காவல்துறை அதிகாரி சொல்கிறார். அது போன்ற பிரசினைகள் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொலைக்காட்சி பெட்டியின் ஆக்கிரமிப்புக்குள் இதுவரை முழுமையாக சிக்காதவர்கள், சிக்க விரும்பாதவர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்: “தோழர்களுடன் ஒரு பயணம்!”
10 கருத்துகள்:
தொலைக்காட்சி பெட்டிதான். அதுதான் மக்களை மழுங்கடிக்க முழுமையாக பயன்படும்” . அது போன்ற பிரசினைகள் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் வீட்டிற்கு ஒரு வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்டு வருகிறது.
முடிந்த அளவில் சமுக விழிப்புணர்ச்சிக்கு பாடுபடவேண்டும் ஒவ்வொரு சிந்தனையுள்ள மனிதனும்.
happy to see that this is shared. best wishes.
நல்ல தகவல்கள்
பதிவு அருமை.............
தகவலுக்கு மிக்க நன்றி.
பதிவின் முகப்பில் இந்திய அரசமைப்பு சட்ட வாசகங்கள். உள்ளே முழுக்க, முழுக்க இந்திய அரசுக்கு எதிரான விச(ய)ங்கள். உங்களையெல்லாம்....
நன்றி Dr. Rudhran, உலவு.காம், போராட்டம் மற்றும் பெயரில்லா நண்பர்கள்.
இரண்டாவது பெயரில்லா நண்பருக்கு, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை (குறி்ப்பாக அதன் நான்காவது அத்தியாயத்தை) முழுமையாக படித்துப் பாருங்கள்.
நான் எழுதுவதன் அர்த்தம் புரியும்.
நல்ல நூல் அறிமுகம். இன்று மும்பையில் நடந்த ஒரு கூட்டத்தில், நான் மாவேயிட்டுகள் பக்கம் தான் என்று அருந்ததி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.
இலவச தொலைக்காட்சிக்கு பின்னால் இவ்வளவு விசயம் இருக்கா?
நான் ஏதோ நாம எல்லாரும் "மானாட, மயிலாட" பார்த்து சந்தோசமா இருக்கறதுக்காக கொடுத்ததுன்னு தப்பா நினைச்சுட்டேன் போல இருக்கு.
எந்த புத்துல எந்த பாம்பு இருக்கும்ன்னு தெரியலையே!
நன்றி நண்பர் சவுக்கு மற்றும் பெயரில்லா.
every body knows t.v.is an idiot box but know body accept that they became idiots(including me).very happy to read these kind of new informations. keep on writing how media blond out mind.
கருத்துரையிடுக