02 ஜூலை, 2010

பெரியார் எழுத்துகள் இணையத்தில் இலவசமாக... இப்போது யுனிகோடிலும்...

1925 முதல் 1938 வரை உள்ள குடி அரசு இதழ்களில் பெரியாரின் எழுத்தும் பேச்சும் 11,000 பக்கங்கள் கொண்ட 28 தொகுப்புகளாக புத்தகங்களாகவும், ரிவோல்ட் ஆங்கிலத் தொகுப்பு 622 பக்கம் கொண்ட புத்தகமாகவும் பெரியார் திராவிடர் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகங்களுக்கான குறுந்தகட்டுடன் புத்தகத்தின் விலை: ரூ.4,500-00. விபரங்கள் பெரியார் திராவிடர் கழகம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 
அம்பேத்கார் மற்றும் ஜின்னாவுடன் பெரியார்

அனைத்து குடிஅரசுத் தொகுப்புகளும் புத்தக வடிவத்திலேயே பெரியார் திராவிடர் கழகத்தின் இணையதளத்தில் (http://periyardk.org) பிடிஎஃப் கோப்பாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  தேவைப்படுபவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 

பெரியார் குறித்த ஆய்வுகளுக்கும்  இணையதளங்களில் பெரியார் குறித்த விவாதங்களுக்கும் பெரியாரை இனிவரும் தலைமுறையினர் அறிந்துகொள்வதற்கும்  UNICODE எழுத்துருவிலும் குடி அரசுக் கட்டுரைகளை வெளியிடுவது அவசியம் என்பதால் 1925 முதல் 1930 வரையுள்ள கட்டுரைகள் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டுளளது. 


இன்னும் சில நாட்களில் 1938 வரை முழுமையாக UNICODE எழுத்துருவில் குடிஅரசு பதிவேற்றம் செய்யப்பட்டுவிடும். 

சொந்தமாக இணையதளம் வைத்திருப்போர், வலைப்பூவில் எழுதுவோர் அனைவரும் தத்தம் தளங்களில் இவற்றைப் பயன்படுத்தலாம். 

முதலில் உடனே பதிவிறக்கம் செய்து பாதுகாத்து வைத்துக்கொள்ளுங்கள். 

4 கருத்துகள்:

முரளிகண்ணன் சொன்னது…

நல்ல செய்தி

பாலராஜன்கீதா சொன்னது…

மிக்க நன்றி.

Sundar Raj சொன்னது…

நல்ல தகவல்..மிகவும் நன்றி

அ.வெற்றிவேல் சொன்னது…

தமிழ்மணம் நட்சத்திரப் பதிவாளர் என்ற முறையில் முதன் முதலாக வந்து பெரும் புதையலை கண்டுள்ளேன்.உண்மையிலேயெ இணையம் வழி எனக்கு கிடைத்த சொத்தாக இடஹி நினைக்கிறேன்..முதல் வேலையாக தரவிறக்கம் செய்து கொள்கிறேன்
நன்றி அய்யா

கருத்துரையிடுக