14 நவம்பர், 2012

நேருவுக்கும், கலாமுக்கும் குழந்தைகளை பிடிக்கும்! – சில குறிப்புகள், சில கேள்விகள்...!

(நேற்றைய, இன்றைய குழந்தைகளுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

குழந்தைகளுக்கும், சிறுவர்-சிறுமியர்களுக்கும் கற்பனைகள் மிகவும் பிடிக்கும். யதார்த்த வாழ்வில் நினைத்துப்பார்க்க முடியாத பல ஆசைகள் கனவில் நிறைவேறுவதே அதற்கு காரணம்!

குழந்தைகளின் சூழலுக்கு ஏற்ப கனவுகள் வேறுபடலாம். ஏழைக் குழந்தைக்கு நல்ல தின்பண்டமும், நவீன உடைகளும் கனவாக இருக்கும். பணம் படைத்தவர்களின் வீட்டுக் குழந்தைகளுக்கு சூப்பர்மேனைப் போல பறப்பது கனவாக இருக்கும்.ஆனால் கனவு என்பது அனைத்துக் குழந்தைகளுக்கும் பொதுவான ஒரு அம்சமாக இருக்கும். குழந்தைகள் வளர்ந்து பெரிதாகும்போது, யதார்த்த வாழ்வின் முரண்கள் அந்த சிறுவர் - சிறுமியர்களின் வாழ்வை நேரடியாக பாதிக்கும்போது கனவுகள் மெல்லக் கரையும்.

இவ்வாறு கனவுகள் கரைவது தனிமனித வாழ்வில் நிகழ்ந்தாலும், சமூக வாழ்வில் நம்மை கனவிலேயே வைத்திருப்பதில் ஆளும் வர்க்கங்களும், அவற்றின் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்களும் வெற்றி பெற்றே வந்துள்ளன. நம்மை கனவில் ஆழ்த்தும் கருவியாக குழந்தைகளையே ஆளும் வர்க்கங்களும், ஊடகங்களும் பயன்படுத்துகின்றன என்பது சுவாரசியமான தகவலாகும்.

ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினமாகும். சுதந்திரத்திற்கு பின் பிறந்த பலருக்கும் நேரு என்றால் குழந்தைகளிடம் அன்பு செலுத்தியவர் என்ற பிம்பம் தொடக்கக் கல்வியின் மூலமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நேருவுக்கு மட்டும்தான் குழந்தைகளைப் பிடிக்குமா? என்ற கேள்விகள் எழுப்பப்படுவதில்லை. சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் போன்றவர்கள் குழந்தைகளை வெறுத்தார்களா? என்பது போன்ற கேள்விகளை எழுப்ப நமது மூளை தயாராவதற்கு முன்னதாகவே இதுபோன்ற செய்திகள் நமது மூளைக்குள் திணிக்கப்படுகின்றன.

எனவே, நேரு என்றாலே கோட்டில் ரோஜா மலரை செருகியிருப்பார். புன்னகை தவழும் முகத்தோடு இருப்பார். அவருக்கு குழந்தைகளை மிகவும் பிடிக்கும்! என்ற பிம்பம் நமது மூளையில் தோன்றி விடுகிறது.

ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அப்துல் கலாமுக்கும் குழந்தைகளை மிகவும் பிடிக்கும் என்ற கருத்து சமூகத்தில் திட்டமிட்டு விதைக்கப்படுகிறது. நேரு காலத்தில் அவர் பள்ளிக்கூடங்களுக்கு சென்று மாணவர்களோடு உரையாடினாரா? என்பது தெரியவில்லை. அப்துல் கலாம் எந்த ஊருக்கு சென்றாலும் அங்குள்ள பள்ளி மாணவர்களோடு உரையாடுவதும், அவர்களை கனவு காணுங்கள்! என்று ஊக்குவிப்பதும் மிகவும் கவனமாக புகைப்படத்துடன் கூடிய செய்தியாக்கப்படுகின்றன.

ஜவஹர்லால் நேருவுக்கும், அப்துல் கலாமுக்கும் குழந்தைகள் மிகவும் பிடிக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் அவர்களுக்கு எந்தக் குழந்தைகளைப் பிடித்திருந்தது? என்ற கேள்வி எழுப்பப் படுவதில்லை. நாம் பார்த்த செய்திகளிலும், புகைப்படங்களிலும் நேருவிடமும், கலாமிடமும் அளவளாவிக் கொண்டிருக்கும் குழந்தைகள் அனைவரும் உயர்தர பள்ளிகளில் படிக்கும் செல்வந்தர்களின் குழந்தைகளே!

பெற்றோரின் வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமோ, கிழிந்த சட்டையும் ஒழுகும் மூக்குமாக உடைந்த அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடமோ ஏன் இந்த தலைவர்கள் அளவளாவியதே இல்லை என்ற கேள்விகளை யாரும் கேட்பதில்லை.

நேருவும், கலாமும் குழந்தைகளின் காவலர்களைப் போல திட்டமிட்டு சித்தரிக்கப்படுவதன் நோக்கம் என்ன?

மேலை நாடுகளின் அரசியல் தலைவர்களின் நடை, உடை, பாவனைகளை தீர்மானிப்பவர்கள் அந்த தலைவர்களின் செய்தித் தொடர்புக்கு பொறுப்பேற்பவர்களே! அந்தத் தலைவர்கள் குறித்த பிம்பங்களை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக இத்தகைய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தேர்தலில் மக்களின் வாக்குகளை கவரும் நோக்கத்திலேயே இவை நடைபெறுகின்றன.

இந்தியாவில் இந்த நடைமுறையை அனைத்து அரசியல்வாதிகளும் முழுமையாக பின்பற்றவில்லை என்றாலும், அந்தப்போக்கின் விளைவாகவே குழந்தைக் காவலர் பிம்பங்கள் திட்டமிட்டு கட்டமைக்கப் படுகின்றன.


சரி இதனால் நமக்கு என்ன பாதிப்பு என்ற கேள்வி எழலாம்!

இந்த பிம்பங்களுக்குள் நாம் சிக்குவதால் நாம் பல உண்மைகளை பார்க்கத்தவறி விடுகிறோம்.

சுதந்திர இந்தியாவின் இறப்பு வீதத்தை கணக்கிடும்போது அன்றாடம் உயிரிழக்கும் குழந்தைகளில் 50 சதவீதம் குழந்தைகள், பட்டினி மற்றும் ஊட்டச் சத்து குறைவு காரணமாக உயிரிழப்பதாக ஐக்கிய நாடுகள் அவையின் உலக உணவுத் திட்டம் தயாரித்துள்ள அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு முப்பது நொடிக்கும் ஒரு குழந்தை உணவு கிடைக்காத காரணத்தால் உயிரிழப்பதாக மற்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது.சரி! ஜவஹர்லால் நேரு, அப்துல் கலாம் போன்ற குழந்தை நேசர்கள் இருக்கும் நாட்டில் குழந்தைகள் பசியாலும், பட்டினியாலும் இறப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுவதில்லை. அதற்கு நாமே சமாதானமும் கூறிக்கொள்வோம்: ஊழல் மயமான இந்தியாவில் குழந்தைகளின் இறப்புக்கு இந்தத் தலைவர்கள் என்ன செய்யமுடியும் என்று!

ஆனால் இந்தத் தலைவர்களும் இந்திய அரசியலின் உச்ச பதவிகளை அனுபவித்தவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம். இவர்கள் ஆட்சியிலிருந்த போதும் ஏழைக் குழந்தைகளின் நிலை மிகவும் அவலமாகவே இருந்துள்ளது.


ஆனால் அந்த அவலத்தை பார்க்கும் விருப்பம் இல்லாமல் இந்தியாவின் உயர்குடி மக்களின் குழந்தைகளை மட்டுமே தேடிச் சந்தித்தவர்கள் இவர்கள். இந்தத் தலைவர்கள் பதவியில் இருந்தபோதும் இந்தியாவில் குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போதும் பட்டினியில் குழந்தைகள் செத்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் பக்கமாக இவர்கள் பார்வையை செலுத்தியதே கிடையாது. அதனால்தான் சேரியில் வசிக்கும் எந்தக்குழந்தையுடனும் இவர்கள் விவாதிக்கும் புகைப்படங்கள் இதுவரை வெளியானதே கிடையாது.

இந்த உண்மைகளை நாம் கவனிக்கத் தவறி இருக்கிறோம். இது மட்டுமல்ல! நன்றாக உடையணிந்த, போஷாக்கான குழந்தைகள் மட்டுமே அழகானவை, புனிதமானவை என்ற கருத்து நமக்குள்ளேயே நம்மையறியாமல் விதைக்கப்பட்டு விட்டது. நம் வீட்டுக் குழந்தைகளைவிட செல்வந்தர் வீட்டுக்குழந்தைகள் நம்மை கவர்கின்றன. நாம் அனுப்பும் வாழ்த்து அட்டைகளில் நம் வீட்டுக்குழந்தைகளின் படங்கள் இடம் பெற்றதில்லை. பதிலாக யாரென்றே தெரியாத போஷாக்கான குழந்தைகளின் படங்களை நாம் வாழ்த்து அட்டைகளிலும், நாட்காட்டிகளிலும் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.

இந்த உளவியலை நமக்குள் ஏற்படுத்தியதில் குழந்தைகளுக்கான உணவை தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன. நம் குழந்தைகளையும் அந்தக் குழந்தைகள் போல போஷாக்காக உருவாக்க முயற்சித்து தோற்றுப்போய், அந்த உணவு நிறுவனங்கள் மேல் கோபப்படுவதற்கு பதில் குழந்தைகள் மீது கோபப்படுவதற்கு நாம் பழகி இருக்கிறோம்.

இதன் விளைவுகள் என்ன?

நம் வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போது நமக்கு அவ்வளவாக உறைப்பதில்லை. அதே போல நடுத்தர அல்லது ஏழை வீட்டுக்குழந்தைகள் பாதிக்கப்படும்போதும் அது நம்மை அவ்வளவாக பாதிப்பதில்லை. ஏனென்றால் அந்தக் குழந்தைகள் நம்மைப் போல சாதாரணமாகவே இருக்கின்றன. நாம் விரும்புவதைப் போல சிவப்பாக, போஷாக்காக இருப்பதில்லை. எனவே அக்குழந்தைகளின் சிரமம் நமக்கு ஒரு பொருட்டாக தெரிவதில்லை.

தமிழக கிராமத்தில் உயர்சாதி குழந்தைகளுக்காக வைத்த குடிநீரை குடித்த குற்றத்திற்காக  பள்ளிச்சிறுமியை அதன் ஆசிரியரே தாக்கி குருடாக்கினால் நாம் பதறுவதில்லை.

ஆந்திராவில் காவல்துறை நடத்திய கண்காட்சியில் பள்ளி மாணவர்கள் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகி இறப்பது ஒரு கொடூரமாக நமது கண்களுக்கு தோன்றுவதில்லை.

நம் வீட்டுக் குழந்தைகளே ஊட்டச்சத்துணவு, முறையான மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறும்போது நமக்கு கோபம் வருவதில்லை. ஆனால் பார்ப்பதற்கு அழகான வசதி படைத்த குழந்தைகளுக்கு இன்னல் ஏற்பட்டால் பதறிப்போய் விடுகிறோம். அந்தக் குழந்தைகளை கொலை செய்ததாக கூறப்படுபவனை காவல்துறையினர் விசாரணையின்றியே கொலை செய்தால் நாம் அதை தீபாவளியாக கொண்டாடுகிறோம்.

அதே நேரம் நமது குழந்தைகளை கொலை செய்பவர்களிடம் இலவச டிவி போன்றவற்றை பெற்றுக் கொண்டு அவர்களுக்கு  மீண்டும், மீண்டும் வாக்களித்து பதவியில் தொடர அனுமதிக்கிறோம்.

ஜவஹர்லால் நேருவையும், அப்துல் கலாமையும் கேவலப்படுத்துவது நமது நோக்கமில்லை. ஆனால் அந்த மாபெரும் தலைவர்கள் குழந்தைத் தொழிலாளர்களிடமும், ஏழைக் குழந்தைகளிடமும் ஏன் அன்பாக இல்லை: அந்த குழந்தைகளின் துயரங்களை துடைக்க அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும். 

ஏனென்றால் இவர்களின் வாரிசுகள் உருவாகி வருகிறார்கள். நானும் ஏழைப்பங்காளன் என்று கட்டடத்தொழிலாளிகளோடு இணைந்து வேலை செய்வதுபோன்ற புகைப்படங்களோடு இவர்கள் அரசியல் அரங்கிற்கு வருகின்றனர். இது போன்ற போலிகளிடம் மீண்டும், மீண்டும் ஏமாறாமல் இருக்க நமது சிந்தனை முறையையே மாற்றி அமைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சிந்திப்போமா?

(கடந்த 2010ஆம் ஆண்டு  குழந்தைகள் தினத்துக்காக எழுதப்பட்ட பதிவு. தேவை கருதி மீள்பதிவு செய்யப்படுகிறது)

27 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

:(

Bharathi சொன்னது…

Very much confusing.

Kavitha Paul சொன்னது…

நல்ல பதிவு. அனைத்துப் புகைப்படங்களும் பேசுகின்றன.

சுந்தரராஜன் சொன்னது…

வாக்களித்த, கருத்து கூறிய அனைவருக்கும் நன்றி!

அஹமட் சுஹைல் சொன்னது…

அருமையான பதிவு ஐய்யா...

கடைசிப் புகைப்படமும் அதற்கான உங்கள் குறியீட்டு விழக்கமும் அருமை.

Anand சொன்னது…

சிறப்பான பதிவு.

பெயரில்லா சொன்னது…

Ovvaru vishayathilum athan innoru pakkathayum alasi aaraynthu puriyavaikkireergal. Arumaiyaana pathivu.. Unmaiyai arivikkum pathivu. Vaazhthukkal.
thenmerkuthendral@gmail.com

பெயரில்லா சொன்னது…

Sundarajan,

If we decide to discuss like this there is no end to it. No one can change the world totally - people try to do their best.

According to me what Dr Kalam wants to inform is any one who ( as per your language) is from a minority comunity, with no known financial background can come up with just dedication and hard work - that's all.

He was just trying to insprie the children. Pl do not paint colours

Rgds

B K Ramachandran

பெயரில்லா சொன்னது…

Kalam has interacted with children across the country.Not all of them are from elite schools.
He has the courtesy to explain to them, talk to them and know their views.He has come up in life on account of hard work and has worked in teams.He is humane and humble.Even if 100 children in this are truly inspired by him that is a great thing.Nehru gave enough importance to education and science.He was a visionary and ensured that the India did not ignore higher education and science. He helped many scientists to build world class labs and was supportive of K.S.Krishnan, Homi Bhaba and many others.
Not all is well with India or the children in India.Have you ever instilled confidence in a child. Have you ever helped them to develop a positive attitude and a healthy respect for others views.

சுந்தரராஜன் சொன்னது…

நன்றி அஹமட் சுஹைல், Anand & thenmerkuthendral.

அருமை நண்பர் B K Ramachandran அவர்களுக்கும் நன்றி.

வர்ணம் பூசுவது என் நோக்கமல்ல. அதேநேரம் திட்டமிட்டு கட்டமைக்கப்படும் மிகைப்படுத்தப்பட்ட பிம்பங்களை உடைப்பது என் கடமை நண்பரே!

பெயரைச் சொல்லக்கூட திராணியற்ற மற்ற அனானிகளின் கருத்துகளுக்கு பதில் அளிக்கத்தான் வேண்டுமா?

ஜாய்.. சொன்னது…

அருமையான பதிவு..

யோகன் பாரிஸ்(Johan-Paris) சொன்னது…

உற்று நோக்கினால் தெரியும் உண்மை!
கடைசிப் படம் அருமை!

பெயரில்லா சொன்னது…

///ஆனால் அந்த மாபெரும் தலைவர்கள் குழந்தைத் தொழிலாளர்களிடமும், ஏழைக் குழந்தைகளிடமும் ஏன் அன்பாக இல்லை: அந்த குழந்தைகளின் துயரங்களை துடைக்க அவர்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
///

very wrong assumption. and gross generalisation. they cared for all children.
they interacted with poor children too.

and Nehru was a socialist and 'anti-capitalist' whose views are basically same as you. and he did care for the poor and down trodden. and thier actions were not for planned publicity (which they did not need anyway) but was a spontaneous gesture from a very humane and broad minded outlook.

K.R.அதியமான் சொன்னது…

சுதநதிர போராட்ட காலதில் பண்டித ஜவகர்லால் நேரூ சுமார் ஒன்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டவர். அவர் சிறை சென்றது பணக்கார இநதியர்களுக்காகவா அல்லது அனைத்து இநதியர்களுக்கமாகவா ?

--

hariharan சொன்னது…

சிந்திக்க வைத்த இடுகை...

அப்துல்கலாம் தன்னுடைய குடியரசுத் தலைவர் பதவியை இந்த சேரிக் குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு செல்வதை ஏன் உத்திரவாதப் படுத்தவில்லை. விமர்சனம் தவறில்லை, பொதுவாழ்வில் மக்களின் ஊதியஹ்தை பெறும் அனைவரும் பதில் கூற கடமைப்பட்டுள்ளனர்.

vinayagamoorthy சொன்னது…

அருமை!
அப்துல்கலாமும்,நேருவும்
அடித்தட்டுமக்களுக்காக எதுவும் கிழித்துவிடவில்லை

தமிழ்மலர் சொன்னது…

அப்துல்கலாமின் இரட்டை வேடத்தில் ஏமார்ந்து தெளிந்தவர்களில் நானும் ஒருவள்.

அறிவகம் என்ற வலைபூவில் அணுஆயுதம் தொடர்பாக அப்துல்கலாமுக்கு எழுதப்பட்ட அனைத்து மின்னஞ்சல்களுக்கும் உடனுக்குடன் பதில் அளித்தார் கலாம்.

ஒரே ஒரு மின்னஞ்சலுக்கு இன்று வரை அவரிடம் பதில் இல்லை. கோவையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் நேரடியாக கூட கேட்டேன் தப்பித்து ஓடிவிட்டார். அப்போது தான் புறிந்தது கலாமின் அரசியல்வேடம்.

ஈழம் இறுதிபோரின் போது ஈழக்குழந்தைகளை மீட்க ஒரு குரல்கொடுங்கள் என்றேன். கடைசிவரை மவுனமாகவே இருந்துவிட்ட அந்தமரம்மண்டை குழந்தைகள் மீது பாசம் காட்டுவது போல வேசம் போட்டுதிரிகிறது. http://tamilarivu.blogspot.com/2009/07/blog-post.html

☀☃ கிறுக்கன்☁☂ சொன்னது…

உண்மை பேசும் இந்த பதிவை தவற விட்டதற்கு முதலில் மன்னிக்க வேண்டுகிறேன்.
\\ நமது சிந்தனை முறையையே மாற்றி அமைக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். சிந்திப்போமா?//
நாம் சிந்திக்கும் திறனை முழுமையாக இழந்துவிட்டோம்,சிந்தித்து இருந்தால், இல்லையெனில் இனியாவது சிந்தித்தால் இந்த கேடு கேட்ட சினிமா காரர்களை அரசியல் செய்யவைத்து, கொழுக்க வைத்து. நம் குழந்தைகள் மட்டும் ஒட்டிய வயிறோடு கந்தல் ஆடையில் காட்சி தரும் அவலம் இருக்குமா?

காஞ்சி மடத்திற்கு போய் பெரியவாளிடம் ஆசி பெற்ற கலாம் அவர்களிடம் கந்தல் ஆடை குழந்தைகள் பற்றிய சிந்தனை இருக்கும் என எதிர்பார்ப்பது நமது மடத்தனம்.

anthony சொன்னது…

கனவிலேயே இருந்து செத்து போகிறவர்களை தட்டி எழுப்ப உதவும் பதிவு .

நன்றி தோழர் பதிவுக்காக

Advocate P.R.Jayarajan சொன்னது…

//பெற்றோரின் வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக வாழ்வைத் தொலைத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளிடமோ, கிழிந்த சட்டையும் – ஒழுகும் மூக்குமாக உடைந்த அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளிடமோ ஏன் இந்த தலைவர்கள் அளவளாவியதே இல்லை என்ற கேள்விகளை யாரும் கேட்பதில்லை//

சத்தியமான வார்த்தைகள்...

இளங்கோவன் பாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான பதிவு நண்பா...கனிவான வாழ்த்துக்கள் :)

சுந்தரராஜன் சொன்னது…

கருத்து கூறிய நண்பர்கள் anthony , Advocate P.R.Jayarajan , இளங்கோவன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி!

தமிழ் குரல் சொன்னது…

மீள்பதிவுக்கு நன்றி...

எவ்வளவோ குழந்தைகள் என்னற்ற காரணங்களால் கொலையாகும் போது கள்ள மவுனம் சாதிக்கும்... ஊடங்களும்... சமுதாயமும்... கடந்த 2010 அக்டோபர் 29-30 ஆம் தேதிகளில் கோவையில் ஒரு உயர் வகுப்பு குழந்தை பாலியம் வன்கொடுமை செய்யபட்டு கொல்லபட்ட... ஊடங்களும்... சமுதாயமும் பொங்கி... பொங்கி அழுதன... அதன் பின் நடந்த என்கவுண்டர் கொலையை கூட மகிழ்ச்சியாக ரசித்தது... இதன் மூலம் வழக்கறிஞர் சொல்ல வரும் செய்தி ஊடங்களும்... சமுதாயமும்... உயர்தர மக்களுக்கானதோ?

Suresh Subramanian சொன்னது…

அருமையான பதிவு நண்பா... please read my tamil kavithaigal in www.rishvan.com

Thangaa சொன்னது…

I am also with stand your side

Thozhirkalam Channel சொன்னது…

உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

மிக வேகமான திரட்டி
http://otti.makkalsanthai.com

பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

மிகவும் அருமையான ஆக்கம் சகோ.
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக