10 ஆகஸ்ட், 2012

கூடங்குளம் மின்சாரம் - இலங்கைக்கு... இதோ ஆதாரம்..!

இந்தியாவில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் இந்தியர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்லை.

இந்தியர்களின் வீட்டுக்கோ, அலுவலகங்களுக்கோ, வணிக நிறுவனங்களுக்கோ, தொழி்ல் நிறுவனங்களுக்கோ மின்சாரம் எப்போது வரும் - எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இதே நிலைதான் அத்தியாவசிய தேவைகளான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கும்.

ஆனால் நோக்கியா, ஹூன்டாய், போர்ட் உள்ளிட்ட பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை மிகக்குறைந்த சலுகை விலையில் வழங்கி தன் இறையாண்மையை நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய, மாநில அரசுகள்.

இந்நிலையில் இனப்படுகொலை, மனித குலத்திற்கு எதிரான குற்றம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசுக்கு பாராட்டும், ஆதரவும் அளிக்கும் விதத்தில் இலங்கைக்கு மின்சாரம் வழங்கவும் இறையாண்மை மிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதோ ஆதாரம்...
(படத்தை சொடுக்கினால் பெரிதாகும்)

இணையத் தொடுப்பு: http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=75546

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலை (பூங்காக்)கள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை (பூங்கா) அமைக்கப்படுகிறது.

இந்திய அரசின் வழக்கப்படி, இந்தியர்களுக்கு மின்சாரம் இல்லாவிட்டாலும் இலங்கைக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கூடங்குளத்தில் அணுஉலை கட்டப்பட்டது போலும்.

வாழ்க இந்தியா!

வளர்க ஜனநாயகம்!!

(8 நவம்பர் 2011 அன்று முதலில் பதிவிடப்பட்டது. தற்போது கூடங்குளம் அணுமின் திட்டத்தின் முதல் அணு உலைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் மீள்பதிவு செய்யப்படுகிறது) 


7 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

ஐயா தங்களின் கட்டுரை தவறான விதத்தில் புனையப்பட்டுள்ளது . நீங்கள் காண்பித்த ஆதாரத்தில் எந்த செய்திகளும் இல்லை . மேலும் நீங்கள் சொல்லி உள்ளீர்கள்

// இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இரண்டு இடங்களில் அணுஉலைகள் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாவது அணுஉலை அமைக்கப்படுகிறது.//
இதோ ஒரு தவறான தகவல் . தாராப்பூர் - 6 அணு உலைகள் , ராஜஸ்தான் - 8 அணு உலைகள் , குஜராத் - 2 அணு உலைகள் , நரோரா - 2 அணு உலைகள் , கைகா - 4 அணு உலைகள் , கல்பாக்கம் - 2 அணு உலைகள் . இப்படி பல உதாரணகள் .

தயவு செய்து தவறான தகவல்களை சொல்லி மக்களை குழப்பாதீர்கள் . நன்றி

சுந்தரராஜன் சொன்னது…

பெயரைச் சொல்லக்கூட துணிவில்லாத பெயரில்லா அவர்களுக்கு,

நான் குறிப்பிட்டது இடங்கள். தற்போது கட்டப்படும் அணுஉலை கேந்திரங்கள் அனைத்தும் அணுஉலை பூங்காக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

ஒவ்வொரு பூங்காவிலும் பல அணுஉலைகள் அமைக்கபடும்.

நான் அறிந்தவரை தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும், ஒரு அணுஉலைப்பூங்கா மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அணுஉலைப்பூங்கா கூடங்குளத்தில் அமைக்கப்படுகிறது.

பெயரில்லா சொன்னது…

மிச்சம் இருக்கும் தமிழன் உயிரை எடுக்க இன்னும் இவர்கள் என்னவெல்லாம் செய்யப்போகிறார்கள்....

பெயரில்லா சொன்னது…

இது மக்களாட்சி தானே ...வேண்டாம் என்றால் விட வேண்டியது தானே...இல்லை தமிழகத்தில் ஒட்டு போட சொல்லட்டும் வேண்டுமா வேண்டாமா என்று...

துரைடேனியல் சொன்னது…

Nalla thagaval Advocate Sir!

அருள் சொன்னது…

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

வவ்வால் சொன்னது…

வழக்கறிஞர்,
வணக்கம்,

இலங்கைக்கு மின்சாரம் மட்டுமா அவங்க பயன்ப்படுத்துற பெட்ரோல் எல்லாம் நம்ம தருவது தான். நம் நாடு கஷ்டப்பட்டு அன்னிய செல்வாணி செலவு செய்து அவங்களுக்கு விற்குது. என்னமோ இந்தியாவில பெட்ரோல் ஆறு ஓடுவதுப்போல.


/நான் அறிந்தவரை தமிழ்நாடு தவிர அனைத்து மாநிலங்களிலும், ஒரு அணுஉலைப்பூங்கா மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டில்தான் இரண்டாவது அணுஉலைப்பூங்கா கூடங்குளத்தில் அமைக்கப்படுகிறது//

சரியா சொன்னிங்க, 30 ஆண்டுகளுக்கு முன்னர் கல்பாக்கத்தில வரவிட்ட வினை, வந்த பிறகும் தொடர் போராட்டம் இல்லை , எனவே தான் தமிழ்நாட்டுக்காரங்க ரொம்ப நல்லவங்க என்று கேரளாவில் வேண்டாம் என்றூ 1988 இல் எதிர்ப்பு காட்டவே இங்கே வந்தது.

கருத்துரையிடுக