நான்..

வழக்கறிஞர் சுந்தரராஜன்


பள்ளி செல்லும் வயது வருமுன்பே தமிழ் கற்கும் முயற்சியில் இந்து ஆலயங்களின் தலவரலாறுகளைப் படித்து அதனால் சில வருடங்கள் இந்துவாக வாழ்க்கை. உயர்நிலைப் பள்ளியிலேயே அறிமுகமான ஈவெரா பெரியார் மூலம் நாத்திகனாகி, தொடர்ந்து கார்ல் மார்க்ஸ், சிக்மண்ட் ஃபிராய்ட் என்று தேடிக்கொண்டே இருக்கிறேன். இன்னும் தமிழையும் முழுமையாக கற்கவில்லை. அரசியலையும் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

சட்டம், மனித உரிமையியல், உளவியல் ஆகியதுறைகளில் முதுநிலைப் பட்டங்களை பெற்றாகிவி்ட்டது.

அச்சு ஊடகம், தொலைக்காட்சி ஊடகம் ஆகியவற்றில் சுமார் 10 ஆண்டுகள் வாழ்ந்து பார்த்தாகிவிட்டது. இலக்கியங்களில் ஆர்வமில்லை என்றாலும், எனக்கும் ஓரளவு எழுதவரும் என்பது புரிந்தது. மீடியா குறித்த பிம்பங்கள் அனைத்தும் அங்கு பணிபுரிந்த நாட்களில் கலைந்து போயின.

மக்களின் சிந்தனைகளையும், நம்பிக்கைகளையும் அரசும், வணிக ஊடகங்களுமே திட்டமிட்டு கட்டியமைக்கின்றன. இந்நிலையில், அந்த ஊடகங்களின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நின்று பொதுமக்களின் சிந்தனையை தட்டி எழுப்புவது மிகமிகக் கடினம் என்பது நன்றாகவே புரிகிறது.

...என்றாலும் என் கைக்கு கிடைத்த எந்த ஒரு சிறிய வாய்ப்பையும் தவறவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு... 


இதோ எழுதிக் கொண்டிருக்கிறேன்!